ARTICLE AD BOX
இந்தியாவில் முதல் முறையாக திருச்சியில் முப்படை ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கான குறைதீர்க்கும் முகாம் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள ராணுவ வீரர்கள் பயிற்சி மைதானத்தில் பாதுகாப்பு கணக்காளர் சென்னை அலுவலகம் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்திய நிகழ்வை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் எல். முருகன் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன். திமுக மிகப்பெரிய தோல்வி பயத்தில் இருக்கிறார்கள். பயம் என்பதை விட பைத்தியம் பிடித்து திரிகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமிர்தாவை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்ததில் இருந்து பயத்தில் வாழ்க்கையை நடத்துகின்றனர்.
கொலை, கொள்ளை, லஞ்சம் லாவண்யம்,போதைப் பொருள் நடமாட்டம் இதனால் மக்கள் திமுகவை உடனே வீட்டுக்கு அனுப்ப நினைக்கின்றனர். தமிழக முதல்வர் காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால் லாக்கப் மரணம் நடந்துள்ளது. 4வருடம் செயல்படாமல் இருந்ததன் விளைவுதான் இது. புகார் கொடுக்க காவல் நிலையம் சென்று வர மக்களுக்கு பயத்தை உருவாக்கியுள்ளனர்.
மிகப்பெரிய ஏ.ஆர் ரகுமான் ஸ்டூடியோவை பார்வையிட சென்றேன். நடிகை மீனா கட்சிக்கு வந்தால் அவரை வரவேற்போம். பாஜகவை அனைத்து தரப்பு மக்களும் விரும்புகின்றனர். ஈர்ப்பு வந்துள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமித்ஷா ஆகியோர் எடுக்கும் முடிவுதான் இறுதியானது. தேசிய ஜனநாயக கூட்டணி தான் மிகப்பெரிய வெற்றியை தரக்கூடிய கூட்டணி.
பாஜக அதிமுக கூட்டணியில் குழப்பம் வேண்டாம், அவசரப்பட வேண்டாம் பொறுமையாக இருங்கள். அதுகுறித்து அமித்ஷா எடப்பாடி பழனிசாமி பார்துக் கொள்வர்கள்.
இதே போல ஸ்டாலினிடம் கூட்டணி குறித்து கேள்வி கேட்க முடியுமா? திமுகவில் உள்ள கூட்டணியில் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகள் மாற்று கருத்துக்களை தெரிவிப்பது குறித்து கேளுங்கள். NDA கூட்டணி வெற்றி கூட்டணி.
காலை 8 மணிக்கு திருமாவளவன் துவங்குவார். மதியம் செல்வப் பெருந்தகை வழிமொழிவார், பின்னர் கம்யூனிஸ்ட் கட்சிகள் பேசும், அதற்கு அறிவாலயம் பதில் சொல்லும். இது போன்று கூட்டணி கட்சிகளுக்கு இன்னும் அஜெண்டா வரவில்லை. வாயில் பிளாஸ்ரி போட்டுக்கொண்டு உள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் சந்திப்பில் அரசியல் பேசவில்லை என தெரிவித்தார்.