ARTICLE AD BOX
தஞ்சாவூர் பாபநாசம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான புண்ணியமூர்த்தி. இவருக்கு தமிழ்செல்வி என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர்.
இதில் இரண்டாவது மகளான ஆர்த்திகா, 12ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது 12ம் வகுப்பு தேர்வுகள் முடிவடைந்து முடிவுகள் வெளியாக இருந்தன. இந்த நிலையில் ஆர்த்திகா தான் தேர்வை சரியாக எழுதவில்லை என பெற்றோரிடம் கூறி புலம்பி வந்துள்ளார்.
இதையும் படியுங்க: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பதிலடி… பாகிஸ்தான் தாக்குதலில் 13 பேர் பலி : பூஞ்ச் பகுதியில் பதற்றம்!
இதனிடையே இன்று அதிகாலை துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை பார்த்து கதறி எழுத பெற்றோர், போலீசுக்கு தகவல் அளித்தனர். உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இன்று காலை 9 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் 413 மதிப்பெண்கள் பெற்று ஆர்த்தியா பாஸ் ஆகியிருந்தார். இதைக் கண்டு பெற்றோர்கள், உறவினர்கள் வேதனை அடைந்தனர்.

பள்ளி தலைமையாசிரியர் பேசும் போது, நன்றாக படிக்கக் கூடிய மாணவி, நல்ல மதிப்பெண்கள் பெற்ற நிலையில் அவர் எடுத்த முடிவு பள்ளிக்கே பேரிழப்பு என கூறியுள்ளார்.