ARTICLE AD BOX

பணி நிரந்தரம் கோரியும், தூய்மை பணியை தனியார் நிறுவனத்திற்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்தும் 13 ஆவது நாளாக சென்னையைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் பலர் ரிப்பன் மாளிகையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
இந்த நிலையில் அமைச்சர்கள் சேகர் பாபு, கே என் நேரு ஆகியோரின் தலைமையில் போராட்டக் குழுவுடன் மேயர் பிரியா உள்ளிட்ட பலரும் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் தற்போது இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. இதனை தொடர்ந்து தூய்மை பணியாளர்களின் போராட்டம் தொடரும் எனவும் போராட்டக்குழு அறிவித்துள்ளது.

இதனிடையே தூய்மை பணியாளர்களின் போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக தேன்மொழி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது, அனுமதிக்கப்பட்ட இடத்தில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை நடத்திக்கொள்ளலாம், போராட்டம் நடத்தும் இடத்தில் இருந்து தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்புள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து ரிப்பன் மாளிகை முன்பு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
The station தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை; தூய்மை பணியாளர்கள் போராட்ட குழு எடுத்த அதிரடி முடிவு appeared archetypal connected Update News 360 | Tamil News Online.