ARTICLE AD BOX
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம், காயங்குளம் என்ற இடத்தில் கடந்த ஜூன் 13ம் தேதி, ரூ.3.24 கோடி பணத்தை, நகைக் கடை அதிபர் ஒருவரிடம் இருந்து 12 பேர் கொண்ட கும்பல் வழிப்பறி செய்து விட்டு, ஆரியங்காவு வழியாக திருப்பூர் மாவட்டத்துக்குள் தலைமறைவாகிவிட்டது.
இது தொடர்பாக கேரள மாநிலம் கரிய குளக்கரை காவல் நிலைய போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில்,இந்த வழக்கு தொடர்பாக திருப்பூர் மாவட்டம் சுபாஷ் சந்திர போஸ் (32), திருக்குமார் (37) உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக மற்ற குற்றவாளிகளை போலீசார் தேடி வருவதை அறிந்த திருவாரூரை சேர்ந்த பாஜக ஓ பி சி அணி மாநில செயற்குழு உறுப்பினர் துரை அரசு ஏற்கனவே கரிய குளக்கரை காவல் நிலையத்துக்கு சென்று ஆஜராகி விட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் இன்று திருவாரூருக்கு வருகை தந்த கேரள போலீசார் திருவாரூர் அருகே கீழக்காவாது குடியில் வசிக்கும் நகர பாஜக இளைஞரணி தலைவர் ஸ்ரீராமை (30) கைது செய்தனர்.

மேலும் இந்த கடத்தலுக்கு ஸ்ரீராமின் கார் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி காரையும் பறிமுதல் பறிமுதல் செய்து கேரளாவுக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் திருவாரூரில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
