ARTICLE AD BOX
தங்க நகைக்கடன் குறித்து ரிசர்வ் வங்கி புதிய விதிகளை கொண்டு வந்ததது, நகைகளின் உரிமையை நிரூபிக்க ரசீது அல்லது உரிமை சான்று ஆவணங்களை சமர்பிக்க வேண்டும், நகை கடைகளில் வாங்கப்பட்ட தங்க காசுகளுக்கு நகை கடன் இல்லை. 75% மட்டுமே நகையின் மதிப்பை வைத்து கடன் வழங்கப்படும்.
நகைக்கடன் பெறும் போது, கடன் பெறுபவரின் திருப்பி செலுத்தும் திறனோடு பெருந்துகிறதா என்பதை உறுதி செய்வது அவசியம் போன்ற பல புதிய விதிகளை ரிசர்வ் வங்கி விதித்தது.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. மத்திய அரசுக்கு எதிராக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அரசியல் கட்சி தலைவர்கள், எம்பிக்கள் கருத்தும் தெரிவித்து, புதிய விதிகளை தளர்த்த கோரிக்கையும் வைத்தனர்.
இந்த நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய விதிகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை செய்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்தனர்.
இது குறித்து தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில் செயல்படும் நிதி சேவைகள் துறை, தங்கக் கடன் பெறும் நடைமுறைகள் குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட வரைவுத் தரநெறிகளை முறைப்படுத்த வேண்டி பரிந்துரைகள் வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.
புதிய ஒழுங்குமுறை விதிமுறைகளிலிருந்து ₹2 லட்சத்திற்கு கீழ் கடன் பெறும் சிறு தொகை கடன் பெறுநர்களை விலக்க பரிந்துரை செய்திருக்கிறது.
இருப்பினும் விவசாயிகள், சிறு வியாபாரிகள் மற்றும் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள மக்கள், தங்களின் அவசரத் தேவைகள், மருத்துவ மற்றும் கல்வி நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒன்றாக தங்க நகைக் கடன்கள் இருப்பதால், அனைத்து தங்க நகைக் கடன்களுக்கும் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
ஏழை மற்றும் நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் நம்பிக்கையுடன் பயன்படுத்தும் வழியாக தங்க நகைக் கடன்கள் இருப்பதால், மத்திய நிதி சேவைகள் துறை வழங்கியுள்ள இந்த முக்கிய பரிந்துரைகளுக்கு ரிசர்வ் வங்கி பரிசீலிப்பதுடன், தங்க நகைக் கடன்களுக்கான பழைய நடைமுறையையே தொடர வேண்டுமென அஇஅதிமுக
சார்பில் வலியுறுத்துகிறேன் என தனது X தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.