நடிகர் ஆர்யாவின் “இருங்க பாய்” மொமண்ட்? திடீரென வெளியான டீசரால் அரண்டுபோன ரசிகர்கள்!

3 weeks ago 13
ARTICLE AD BOX

நல்ல நடிகர், ஆனால்?

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வந்தார். ஆனாலும் அவரது சமீபத்திய திரைப்படங்கள் எதுவும் அவரது கெரியருக்கு பெரிதாக கைக்கொடுக்கவில்லை. அவரது நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளிவந்த “கேப்டன்”, “காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்” ஆகிய திரைப்படங்கள் படுதோல்வியை தழுவின. 

இந்த நிலையில்தான் தற்போது மீண்டும் கம்பேக் கொடுக்கும் வகையில் ஒரு அசத்தலான கதையம்சத்தில் நடித்துள்ளார் ஆர்யா. இத்திரைப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளிவந்துள்ளது. 

அனந்தன் காடு…

மலையாள சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் ஜியேன் கிருஷ்ணகுமார். இவர் தமிழில் ஆர்ஜே பாலாஜியை வைத்து “ரன் பேபி ரன்” என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதனை தொடர்ந்து ஆர்யாவை வைத்து தற்போது “அனந்தன் காடு” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் தமிழ், மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது.

இத்திரைப்படத்தில் ஆர்யா போராளியாக நடித்துள்ளார். ஆதிக்கத்தை எதிர்த்து போராடும் ஒரு கும்பலை குறித்த கதையம்சத்தில் இத்திரைப்படம் உருவாகியுள்ளதாக தெரிய வருகிறது. இத்திரைப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளிவந்துள்ள நிலையில் இந்த டீசரில் இடம்பெற்ற பாடல் வரிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

“வெளிச்சம் யாவும் விழுங்கி வானில் இடித்த மின்னல் நான், வறட்சி மண்ணில் புரட்சி பூக்க பிறந்தவந்தான் நான்” என்று தொடங்கும் இப்பாடல் ஆர்யாவின் கதாபாத்திர அம்சத்தை விவரிக்கும் பாடலாக அமைந்துள்ளது. இத்திரைப்படத்திற்கு முரளி கோபி என்ற பிரபல மலையாள திரைக்கதை ஆசிரியர் திரைக்கதையில் பணியாற்றியுள்ளார். இவர் “லூசிஃபர்”, “எம்புரான்” போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

  • arya starring ananthan kaadu movie title teaser launched நடிகர் ஆர்யாவின் “இருங்க பாய்” மொமண்ட்? திடீரென வெளியான டீசரால் அரண்டுபோன ரசிகர்கள்!
  • Continue Reading

    Read Entire Article