நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவின் உருக்கமான பகிர்வு…வைரலாகும் வீடியோ!

1 week ago 10
ARTICLE AD BOX

உறவுகள் தான் முக்கியம்

நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்.

இதையும் படியுங்க: ‘பேட் கேர்ள்’ டீசர் விவகாரம்…கூகுளுக்கு பறந்த நோட்டீஸ்..நீதிமன்றம் கெடுபிடி.!

சிறந்த கல்வி மற்றும் குடும்ப ஆதரவில் தன்னுடைய கனவை நனவாக்கி வெளிநாட்டில் டாக்டராக பணியாற்றினார்.சமீபத்தில் அவர் பகிர்ந்துள்ள உருக்கமான வீடியோ, ரசிகர்களிடையே அதிகம் பரவியுள்ளது.

முன்னணி இயக்குநர் ஒருவரிடம் இருந்து ஹீரோயினாக நடிக்க அழைப்பு வந்தபோதும், குடும்பத்தினர் அவரை மருத்துவத் துறையில் உயரச் செய்ய வேண்டும் என்று உறுதியுடன் இருந்தனர்.

அனிதா மருத்துவம் படித்து வெற்றிகரமாக டாக்டராக, பின்னர் 20 ஆண்டுகள் ஒரு புரொபசராக பணியாற்றினார்.தொடர்ந்து 15 வருடங்கள் அவசர சிகிச்சை பிரிவில் வேலை செய்து,பல உயிர்களை காப்பாற்றினார்.உயர்ந்த சம்பளம் பெற்றபோதிலும், உறவுகள் தான் முக்கியம் என்பதற்காக, விருப்ப ஓய்வு எடுத்து குடும்பத்தோடு நேரம் செலவிட சென்னை திரும்பியுள்ளார்.

ஏன் இந்த முடிவை எடுத்தேன் என்று இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவரது உருக்கமான பேச்சில்,குடும்பம், உறவுகள், மனித உறவுகளை வாழ்நாளில் பணத்தை விட முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.தற்போது இந்த வீடியோ பலருடைய கவனத்தையும் ஈர்த்து அவரை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • Anitha Vijayakumar Viral Video நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவின் உருக்கமான பகிர்வு…வைரலாகும் வீடியோ!
  • Continue Reading

    Read Entire Article