ARTICLE AD BOX
அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட போதை பொருள் வாங்கி பயன்படுத்திய நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரசாத், தீங்கிரை என்ற படத்தை ஸ்ரீகாந்த்தை வைத்து தயாரித்துள்ளார். அந்த படத்தில் நடித்ததற்காக ரூ.10 லட்சம் பாக்கி இருந்ததால், கொடுக்க வேண்டிய பணத்திற்கு பதில், பிரசாத் போதைப் பொருளை சுமார் ரூ.5 லட்சத்திற்கு வாங்கி கொடுத்துள்ளார்.
இதையும் படியுங்க: கமல்ஹாசனை ஓரங்கட்டிவிட்டு பாக்ஸ் ஆஃபீஸை திணறடித்த தனுஷ்? குபேராவின் மாஸ் கலெக்சன்!
இது பிரசாத் கைது செய்யப்பட்ட போது விசாரணையில் போலீசாருக்கு தெரியவந்தது. தொடர்ந்து பல நடிகர்ள் இதில் உள்ளதாக கூறப்படும் நிலையில், கழுகு பட கிருஷ்ணா தலைமறைவாக உள்ளார்.
அவரை தேடி பிடிக்க போலீசார் 5 தனிப்படைகளை அமைத்துள்ளனர். படப்பிடிப்புக்காக கேரளா சென்ற அவர் தலைமறைவாக உள்ளார். செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தியபோது, தனக்கு மகன் உள்ளான், அவனை கவனித்துக் கொள்ள வேண்டும், என்னை மன்னித்துவிடுங்கள் என நீதிபதியிடம் கதறியுள்ளார். ஜாமீன் கேட்டு நீதிபதியிடம் கெஞ்சியுள்ளார் ஸ்ரீகாந்த்.
இந்த நிலையில் போதைப் பொருள் வழக்கில் கைதாகும் குற்றவாளிக்கு 10 வருடம் சிறை தண்டனை கொடுப்பது வழக்கம். இவர் குற்றத்தை ஒப்புக்கொண்டாலும், 3வது குற்றவாளியாக இருப்பதால் 10 வருட சிறை தண்டனை கிடைக்ககூடும் என கூறப்படுகிறது. ஒரு வேளை 10 வருட சிறை தண்டனை கிடைத்தால் ஸ்ரீகாந்தின் மொத்த சினிமா வாழ்க்கையே கேள்விக்குறிதான்.

6 months ago
69









English (US) ·