ARTICLE AD BOX
நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.
சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வரும் சினேகா, நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்தவர். இந்த ஜோடிக்கு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்க: பில்டப் காட்டி சீன் போட்ட நயன்தாரா.. பதிலடி கொடுத்த 90களின் கனவுக்கன்னி!
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி கொடுத்திருந்த பிரசன்னா, நடிகை சினேகாவுக்கு அரிய வகை பிரச்சனையான ஓசிடி உள்ளதாக கூறியுள்ளார்.
சினேகாவுக்காக வீட்டை கூட 3 முறை மாத்தியுள்ளோம். ஆனால் நான் இன்னும் சினேகாவை மாற்றவில்லை என நக்கலாக கூறினார்.
இது குறித்து சினேகா பேசும் போது, ஆமாங்க, எனக்கு அரிய வகை பிரச்சனையான ஓசிடி உள்ளது. எப்போதும் வீடு சுத்தமாக இருக்க வேண்டும். குறிப்பாக கிச்சன் சுத்தமாக இருக்க வேண்டும். இல்லெயன்றால் அவ்வளவுதான்.
இது அச்சப்பட தேவையில்லை என்றும், எல்லா விஷயமும் சரியாக இருக்க வேண்டும், சுத்தமாக இருக்க வேண்டும் என இந்த பிரச்சனை உள்ளவர்கள் எதிர்பார்ப்பார்கள் என கூறியுள்ளார்.

ஓசிடி என்பது அதிக கோபம் வரக்கூடிய ஒரு வகை மன நோய் என கூறப்படுகிறது. நோய் உள்ளவர்களுக்கு பிடிக்காத ஒரு விஷயம் நடந்தால் அதிக கோபம் மற்றும் ஆவேசமடைவார்கள் என கூறப்படுகிறது,.
