ARTICLE AD BOX
விஷால் பட நடிகை
பாலிவுட்டில் “ஆஷிக் பனாயா ஆப்னே” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தனுஸ்ரீ தத்தா. அதனை தொடர்ந்து பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் “தீராத விளையாட்டுப் பிள்ளை” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளைக்கொண்டார்.

இதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் நானா படேக்கர் மீது Me Too குற்றச்சாட்டை வைத்தார். “Horn ‘Ok’ Pleassss” என்ற திரைப்படத்தில் நடித்தபோது நானா படேக்கர் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கியதாக குற்றம் சாட்டினார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தனுஸ்ரீ தத்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் கதறி அழுதபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யாராவது காப்பாத்துங்க?
தனது சொந்த வீட்டிலேயே தன்னை டார்ச்சர் செய்வதாகவும் தனது சொந்த வீட்டில் உள்ள வேலைக்காரர்களை அறிமுகமே இல்லாத நபர்கள் நியமித்ததாகவும் வீட்டுப் பொருட்களை திருடுவதாகவும் அந்த வீடியோவில் அவர் கண்ணீர் விட்டு அழுதபடி பேசியுள்ளார். மேலும் 2018 ஆம் ஆண்டு Me Too புகார் வைத்ததில் இருந்தே இந்த பிரச்சனைகள் இருந்து வருவதாகவும் இந்த நிலைமை மேலும் மோசமடைவதற்குள் யாராவது தன்னை காப்பாற்ற வேண்டும் எனவும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து அவர் பதிவேற்றிய வேறு ஒரு வீடியோவில் தனது வீட்டில் இதுதான் என்று குறிப்பிடமுடியாதபடி சப்தம் கேட்பதாகவும் ஹிந்து மந்திரங்களை ஜெபித்தபடி காதில் ஹெட்ஃபோன் அணிந்து இந்த ஒலிகளை கண்டுகொள்ளாமல் கவனத்தை திசை திருப்பி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது பலருக்கும் பீதியை கிளப்பியுள்ளது.
