நடிகைகளின் இடுப்பை கிள்ளி அரசியல் செய்யும் விஜய்.. அண்ணாமலை கடும் விமர்சனம்!

5 hours ago 4
ARTICLE AD BOX

தமிழகத்தில் டாஸ்மாக் ஊழல் முறைகேடு தொடர்பாக ஆளும்கட்சி மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுது. மேலும் ரூ.1000 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.

இதையடுத்து பாஜகவினர் இன்று தமிழகம் முழுவதும் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக அண்ணாமலை அறிவித்தார். அதன்படி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழிசை, வானதி சீனிவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படியுங்க: வீட்டைவிட்டு கிளம்பிய சிறுமிகள்.. வழக்கறிஞர் செய்த கொடூர செயல்.. என்ன நடந்தது?

தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்ட அண்ணாமலை, மாலை 6 மணி ஆகியும் விடுவிக்கப்படாததால் போலீசாருடன் கடும் வாக்குவாதம் செய்தார்.

இதையடுத்து 7 மணிக்கு மேல் விடுவிக்கப்பட்ட அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், டாஸ்மாக் ஊழலில் முதலமைச்சர் ஸ்டாலின் தான் முதல் குற்றவாளி. அடுத்தது டாஸ்மாக் கடைகளில் முதலமைச்சர் ஸ்டாலின் போட்டோவை ஆணி அடித்து மாட்டும் போராட்டத்தை பாஜகவினர் நடத்துவார்கள் என தெரிவித்தார்.

பாஜக – திமுக ரகசிய கூட்டணி என தவெக கூறியது குறித்து அண்ணாமலையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, முதலில் தவெக மக்களை சந்திக்க வேண்டும்.

விஜய் மாதிரி நடிகைகளின் இடுப்பை கிள்ளி நான் அறிக்கை விடவில்லை. நான் களத்தில் மக்களை சந்தித்து தான் அறிக்கை விடுகிறேன். நாடகம் போடுவது விஜய்தான். திமுகவின் B டீம்தான் தமிழக வெற்றிக் கழகம்.

Annamalai Criticized TVK Leader Vijay

வரம்பு மீது பேசினால் நானும் பேசுவேன். Work From Home அரசியலில் இருந்து வெளிய வா. மாஸ்டர் படத்தில் தம் அடிப்பே, சாராயம் குடிச்சிட்டு டாஸ்மாக் பற்றி பேசுவதா. சின்ன பசங்க மாதிரி பாஜகவிடம் சண்டை போடக்கூடாது என சரமாரியாக விமர்சித்தார்.

  • I would rather not get married.. 37-year-old Simbu's heroine open திருமணம் செய்யாமல் இருக்கவே விரும்புகிறேன்.. 37 வயதாகும் சிம்பு பட நாயகி ஓபன் டாக்!
  • Continue Reading

    Read Entire Article