நடிகையை உருகி உருகி காதலித்த மனோஜ் பாரதிராஜா.. மனைவி செய்த தியாகம்!

1 month ago 40
ARTICLE AD BOX

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ஒரே ஒருமகனாக மனோஜ் பாரதி ராஜா நேற்று திடீர் மரணமடைந்தது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மனோஜ் பாரதிராஜா நடிகையை காதலித்து கரம்பிடித்த சில தகவல்களை தெரிந்து கொள்வோம். தாஜ்மஹால் படம் மூலம் தனது தந்தையின் இயக்கத்தில் சினிமாவில் அறிமுகமானார் மனோஜ்.

இதையும் படியுங்க: உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி பெண்ணுக்கு மிரட்டல்.. திருமணம் செய்ய மறுத்ததால் காவலர் வெறிச்செயல்!

பின்னர் அல்லி அர்ஜூனா, ஈரநிலம், சமுத்திரம் போன்ற படங்களில் நடித்தார். ஆனால் அவருக்கு பெரியதாக வாய்ப்பு கிடைக்கவில்லை.இதையடுத்து தனது தந்தையை போலவே இயக்குநராக அவதாரம் எடுத்தார்.

மார்கழி திங்கள் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அவருக்கு தோல்விதான் கிடைத்தது. ஆனால் அவருக்கு பக்க பலமாக இருந்தது அவரது காதல் மனைவி நந்தனா தான். இவரும் தமிழில், ஏபிசிடி, சக்சஸ், சாதுர்யன் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

Manoj Bharathiraja Daughters

சாதுர்யன் படத்தில் நடித்த போது, மனோஜ் உடன் காதல் வயப்பட்டார். இந்த ஜோடியின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்க, 2006ல் கேரளாவில் திருமணம் நடந்து, சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது.

திருமணத்திற்கு பின்னர் நந்தனா சினிமாவில் இருந்து விலகினார். இவர்களுக்கு ஆர்த்திகா மற்றும் மதிவதனி என இரு பெண் பிள்ளைகள். மூத்த மகள் ஆர்த்திகா இயக்குநராக உள்ளார். இவர் எடுத்த வெப்சீரியஸை பாரதி ராஜா பாராட்டியிருந்தார்.

Manoj Bharathiraja Love Proposal to Actress Nandana

இளையமகள் கல்லூரியில் படித்து வருகிறார். மனோஜின் தயாரிப்பு நிறுவனத்தை அவரது மனைவி நந்தனா கவனித்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்து கொண்ட மனோஜ், நேற்று மாலை 6 மணிக்கு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

  • Manoj Bharathiraja Love Proposal to Actress Nandana நடிகையை உருகி உருகி காதலித்த மனோஜ் பாரதிராஜா.. மனைவி செய்த தியாகம்!
  • Continue Reading

    Read Entire Article