ARTICLE AD BOX
நிரந்தர சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்று புகழப்படுகிறார். அவருக்கு ஓய்வே இல்லை என்பது இந்த வயதிலும் அவரது சுறுசுறுப்பான நடையை பார்த்தாலே தெரிந்துவிடும். அந்தளவுக்கு மிகவும் உத்வேகம் தரக்கூடிய நடிகராக வலம் வருகிறார் ரஜினிகாந்த்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய “கூலி” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கி வருகிற “ஜெயிலர் 2” திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் “ஜெயிலர் 2” திரைப்படத்திற்கு பிறகு சினிமாவுக்கே டாட்டா காட்டப்போகிறார் என்று ஒரு தகவல் பரவி வருகிறது.
லதா ரஜினிகாந்த் சொன்ன பதில்
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த், தனது கணவரான ரஜினிகாந்த் சினிமாவில் இருந்து விலகுகிறாரா? என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

அவர் அளித்த பதில் என்னவென்றால், “எனக்கு தெரிந்தால் இதற்கு பதில் சொல்லலாம். இன்னும் அதை பற்றி எதுவும் யோசிக்கவில்லை” என்பதுதான். இதன் மூலம் ரஜினிகாந்த் ஓய்வு பெறுகிறார் என்ற தகவல் வதந்தி என தெரிய வந்துள்ளது.
