ARTICLE AD BOX
தென்னிந்தியாவின் டாப் நடிகை
சினிமாவிற்குள் நுழைந்து 26 வருடங்கள் ஆகியும் இன்றும் தென்னிந்தியாவின் டாப் நடிகையாக வலம் வருகிறார் திரிஷா. தற்போது இவர் நடித்துள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் கே.எஸ்.ரவிக்குமார் எடுத்த பேட்டியில் கலந்துகொண்டார் திரிஷா.
சொகுசு கப்பலில் கத்திய திரிஷா
அப்போது கே.எஸ்.ரவிகுமார், மன்மதன் அம்பு படத்திற்காக ஒரு சொகுசுக் கப்பலில் படமாக்கிக்கொண்டிருந்தபோது ஒரு நாள் நடு இரவு 3 மணிக்கு யாரும் இல்லாத நேரத்தில் கடலை பார்த்து திரிஷா “ஐம் தி குயின் ஆஃப் தி வேர்ல்ட்” என்று கத்தியதாக கூறினார். அப்போது திரிஷா வெட்கப்பட்டு சிரித்துக்கொண்டே, “டைட்டானிக் படத்தில் கத்துவது போல் அருகில் யாரும் இல்லையே என்று அப்படி செய்தேன்” என கூறினார்.

6 months ago
87









English (US) ·