ARTICLE AD BOX
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப் தொடரில், மனோஜ் குமார், பிரியா மணி, ஜெய்தீப் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதில் ஒரு முக்கியரோலில் நடித்தவர் தான் ரோஹித் பாஸ்ஃபோர். இவரது உடல் நேற்று முன்தினம் கர்பங்கா நீர்வீழ்ச்சி அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்க: தியாகம்னா என்னனு தெரியுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி X தளத்தில் கொடுத்த பதிலடி!!
நேற்று முன்தினம், தனது ஒன்பது சக நண்பர்களுடன் ரோஹித் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது நீர்வீழ்ச்சியில் ரோஹித் விழுந்ததாக சொல்லப்படுகிறது.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், இந்த சம்பவம் பிற்பகல் 2 மணிக்கு நடந்துள்ளது. உடலை மீட்டு, மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தோம்.

உடலில் முகம், கழுத்து என பல இடங்களல் காயம் உள்ளதால், வழக்குப்பதிவு செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக கூறினர்.
இதனிடையே இது திட்டமட்ட படுகொலை என குடும்பத்தினர் கூறியுள்ளனர். ரோஹித் தவறி நீர்வீழ்ச்சியில் விழுந்ததாக கூறப்படும் நிலையில், ரோஹித்தின் நான்கு நண்பர்கள் அவரைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.
சில நாட்களுக்கு முன் பார்க்கிங் தொடர்பாக சண்டை ஏற்பட்டதாகவும், அப்போது ரோஹித்தை கொலை செய்துவிடுவோம் என அவர்கள் மிரட்டியதாகவும் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
இதன்பின்னர் சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளனர். அப்போது கூட ரேஹித் வரவில்லை என்றுதான் கூறினார். ஆனால் ஜிம் கோச், வற்புறுத்தியதால்தான் அவன் சென்றான். இதனால் இது கொலை தான் என்றும், அனைவருக்கும் தொடர்புள்ளது என கூறியுள்ளனர்.
இந்தநிலையில், சம்மந்தப்பட்ட நண்பர்கள் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுவதால் இது கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். ஃபேமிலி மேன் தொடர் நவம்பர் மாதம் வெளியாக உள்ள நிலையில் நடிகர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.