நண்பனின் தங்கைக்கு மோசமான மெசேஜ்.. வீட்டுக்கே சென்ற அத்துமீற முயன்ற VIRTUAL WARRIORS!

2 months ago 35
ARTICLE AD BOX

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக ஆலோசனை கூட்டத்தில் காணொளி காட்சியில் பங்கேற்ற விஜய், தவெகவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ரசிகர்கள் இனிமேல் Virtual Warriors என அழைக்கப்படுவர் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு இன்ஸ்டாகிராமில் தீவிரமாக குரல் கொடுத்தவர் ஸ்ரீவிஷ்ணு குமார். தற்போது அவர் ஒரு வீடியோவை பதிவிட்டு, நான் பண்ணது தப்புதான், நண்பனோட தங்கச்சி கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணிருக்கக்கூடாது என கதறி அழுதுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாள் பார்த்த நண்பரின் தங்கைக்கு மோசமாக மெசேஜ் செய்து, அந்த பெண்ணின் வீட்டுக்கே சென்றுள்ளார் விஷ்ணு. வீட்டுக்கு வரும் விஷ்ணுவுக்கு பாடம் புகட்ட தங்கை, தனது சகோதரனுடன் காத்திருந்தார்.

மோசமான புத்தியுடன் சென்ற விஷ்ணுவை, அவரது நண்பர் விளாசி தாக்கியுள்ளார். மேலும் முட்டு போட்டு மன்னிப்பு கேட்க வைத்து அந்த வீடியோவையும் விஷ்ணுவின் இன்ஸ்டாவில் போடவைத்துள்ளார்.

இது இணையத்தில் படுவைலரானது. தவெகவுக்கு எதிராக விமர்சனங்களும் குவிந்து வருகிறது. இதனிடையே இந்த வீடியோ டெலிட் செய்ய்பட்டுள்ளது.

மொபைல் மிஸ் ஆகியுள்ளதால் அதில் இருந்து ஏதாவது மெசேஜ் வந்திருந்தால், அதற்கும் தனக்கும் எந்த சம்மந்தமுமில்லை என்று விஷ்ணு தெரிவித்துள்ளார்.

ஆனால் விஷ்ணு குறித்து எந்த புகாரும் இதுவரை காவல் நிலையத்தில் அளிக்கவில்லை என்றும், சட்டத்தை நீங்களே கையில் எடுப்பது தவறு என்றும் ஒரு தரப்பு கூறி வருகிறது.

— தஞ்சாவூரான் 🪼 (@Raja180614s) April 21, 2025

தவெகவுக்கு ஆதரவாக வீடியோ போட்ட இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு, தவெகவை சேர்ந்தவர் இல்லை என்று ஒரு தரப்பினர் கருத்துகளை கூறி வந்தாலும், அவர் தவெகவில் VIRTUAL WARRIORS ஆக உள்ளாரா இல்லையா என்பது தலைமை தான் சொல்ல வேண்டும் என்ற குரலும் வலுத்து வருகிறது.

  • malavika mohanan shared the bad experience when she was 19 year old in mumbai local train ஓடும் ரயிலில் நடந்த கொடூரம்! பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான மாளவிகா மோகனன்? அடக்கடவுளே!
  • Continue Reading

    Read Entire Article