ARTICLE AD BOX
வீட்டுக்குள் இருந்து அடுத்தடுத்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
விசாரணையில், மேற்கு வங்கத்தை சேர்ந்த மந்திரா மொண்டல் என்ற பெண் தனது கணவர் பிஜோன் மொண்டலுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார்.
2 வருடங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்து விட்டனர். கணவரின் பிஜோன் மொண்டல் மற்றும் அவரது நண்பர் சுமன் மொண்டல் இருவரும் அந்தமான் தீவில் வேலைக்காக சென்றுவிட்டனர்.
தாய் வீட்டில் தனது மகனுடன் மந்த்ரா வசித்து வந்துள்ளார். பெங்களூருவில் உள்ள தாத்தா பாட்டி வீட்டில் மகனை விட்டுவிட்டு, அருகில் தனி வீட்டில் மந்த்ரா இருந்துள்ளார்.
இந்த நிலையில் தான், வீட்டில் இருந்து மந்த்ரா சடலமாக மீட்கப்பட்டார். அதே போல அருகில் கணவரின் நண்பர் சுமனும் சடலமாக கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முதல் கட்ட விசாரணையில், கணவரின் நண்பன் சுமன், மந்த்ராவுடன் நெருங்கி பழகி வந்துள்ளனர். அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
கணவரின் பிரிவு இதற்கு சாதகமாக அமைந்த நிலையில், இந்த உறவு குறித்து யாருக்கும் தெரியவில்லை. ஆனால் இருவருக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக கொலை செய்யும் அளவுக்கு சென்றுள்ளது.
சம்பவ நடந்த 15 நாட்களுக்கு முன்பு அந்தமானில் இருந்து சுமன் முன்கூட்டியே வந்துள்ளார். வந்தவர் நேராக மந்த்ராவிடம் சென்று வாக்குவாதம் செய்துள்ளார். வன்முறையாக மாறியதால், கோபத்தில் சுமன் கத்தியை எடுத்து மந்த்ராவின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டார் சுமன். இருவரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அதே சமயம் இருவரும் நெருங்கி பழகிய விஷயம் குடும்பத்தாருக்கு தெரியாமல் இருந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
