ARTICLE AD BOX
கமல்ஹாசன்-ரஜினிகாந்த் நட்பு
கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் தொடக்கத்தில் 16க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர். எனினும் ஒரு கட்டத்திற்குப் பிறகு இனி தனி தனியாக நடிப்போம் என இருவரும் முடிவெடுத்து அதன் பின் தனி தனியாக திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்கள். அதன் பின் ஒருவர் உலக நாயகனாகவும் ஒருவர் சூப்பர் ஸ்டாராகவும் உருமாறிவிட்டனர்.
அதுமட்டுமல்லாது தமிழ் சினிமாவின் போட்டி நடிகர்களாகவும் வளர்ந்தனர். எனினும் சினிமாவில் மட்டுமே போட்டி நடிகர்களாக திகழ்ந்து வரும் இருவரும் நிஜ வாழ்வில் சிறந்த நண்பர்களாகவே நீடித்து வருகின்றனர். இப்போதும் அவர்களுடைய நட்பிற்கு இடையே எந்த விரிசலும் இல்லை.

மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் தலைவராகவம் திகழ்ந்து வருவதை அனைவரும் அறிவோம். அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் வருகிற ஜூலை 25 ஆம் தேதி கமல்ஹாசன் மாநிலங்களவை எம் பி ஆக பதவியேற்கவுள்ளார்.
இந்த நிலையில் தனது நண்பர் ரஜினிகாந்துடன் இது குறித்தான மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட புகைப்படங்களை கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
புதிய பயணத்தை நண்பர் @rajinikanth உடன் பகிர்ந்தேன். மகிழ்ந்தேன். pic.twitter.com/n9R4HgsxlC
— Kamal Haasan (@ikamalhaasan) July 16, 2025