நமக்குள்ளயே சண்டை போட்டுக்காதீங்க- பஹல்காம் தாக்குதல்; அஜித் கொடுத்த பதிலடி… 

1 week ago 14
ARTICLE AD BOX

இதயத்தை பதறவைத்த சம்பவம்

காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில் சிலர் ஒரு குறிப்பிட்ட சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என மதப் பிரச்சனையை கிளப்பும்படி கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஜனாதிபதி திரௌபதி முர்மு கையால் பத்ம பூஷன் விருதை பெற்ற அஜித்குமார் ஒரு செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்தார். 

ajith talks about pahalgam  terror attack

நமக்குள்ளயே சண்டை வேணாம்

அதில் பேசிய அஜித்குமார், “பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக பிரார்த்திக்கிறேன். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காது என்று நான் நம்புகிறேன்” என கூறிய அவர், “வேற்றுமைகளை கடந்து நாம் அமைதியான சமூகமாக வாழ்வோம். ஒவ்வொருவரின் மதத்தையும் நாம் மதிக்கவேண்டும். குறைந்தபட்சம் நம் நாட்டுக்குள்ளயாவது சண்டை வேண்டாம்” என்று கூறினார், இவரது பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

  • ajith talks about pahalgam terror attack நமக்குள்ளயே சண்டை போட்டுக்காதீங்க- பஹல்காம் தாக்குதல்; அஜித் கொடுத்த பதிலடி… 
  • Continue Reading

    Read Entire Article