ARTICLE AD BOX
அண்ணாமலை எடப்பாடி சொல் ஏற்கமாட்டேன். எங்கள் தலைவர் சொல்வதை கேட்போம் என்கின்றார். இவரோடு கூட்டணி சேர எந்த கட்சியும் தயாராக இல்லை. நம்பகமான தலைவர் இல்லை
இந்த கூட்டணியே தேறுமா என தெரியவில்லை. 2019 தேர்தலில் வங்கி கணக்கில் இருந்து வங்கி கணக்கிற்கு தேர்தல் செலவிற்கு திமுக பணம் அனுப்பியது. இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை
எடப்பாடி ஏதோ புதியதாக கண்டுபிடித்த மாதிரி பேசுகின்றார். எங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல திராணியற்ற எடப்பாடி பழனிச்சாமி திசை திருப்புகின்றார்.
ஓராயிரம் முறை பேசுங்கள் எழுதுங்கள். அரசியல் கேள்விகளுக்கு பதில் சொல்ல திராணி,தெம்பு இருந்தால் , முதுகெலும்பு இருந்தால் சொல்லுங்கள்
காமராசர் சர்ச்சை குறித்த கேள்விக்கு, தவறான முறையில் இறந்து போன பிறகு விமர்சிப்பது அரசியல் நாகரீகம் அல்ல. முதல்ரும் இதற்கு விளக்கம் அளித்து விட்டார்.
ஆனால் பா.ஜ.க காமராஜரை பற்றி பேச தகுதி இருக்கின்றதா? டெல்லியில் காமராசரை வீட்டோடு எரிக்க முயன்றவர்கள் அவர்கள். காமராசர் குறித்து பா.ஜ.கவிற்கு எந்த தகுதியும் இல்லை
திமுக கூட்டணிக்கு எந்த கட்சி வருகின்றது, வர வில்லை என்பது தெரியாது. சேர்ப்பதா இல்லையா என முடிவு செய்த வேண்டி முதல்வர்.
1952 தேர்தலில் இருந்து கூட்டணி இருக்கினறது. அந்த கூட்டசி ஓரு ஆண்டு கூட நீடித்தநு கிடையாது. ஆனால் திமுக தலைமையிலான கூட்டணி. 8 ஆண்டு காலமாக கூட்டணி நீடித்து வருகின்றது இது ஒரு கொள்கை அடிப்படையில் உருவான கூட்டணி
2026ல் பேச்சுவார்த்தை குழு அமைந்து சீட் குறித்து பேசுவோம். அதிமுக என்ற திராவிட கட்சி அழிவு பாதையை அவர்கள் தேர்வு செய்து இருக்கின்றனர்.
தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றனர். பாழும் கிணற்றில் போய் அவர்களாக விழுந்து இருக்கின்றனர்.
அவர்கள் விழுந்ததுடன் இல்லாமல் எங்களையும் சேர்த்துக் கொள்ள பார்க்கின்றனர். அரசியல் தலைவர்கள் என்பவர்களுக்கு நம்பகதன்மை வேண்டும்.
எடப்பாடியை யார் முதல்வராக்கியது? சசிகலாதான் முதல்வராக்கியது. அவர்கதி அதோகதியானது். ஓபிஎஸ் , எடப்பாடியை ஆதரித்து ஆட்சியை காப்பாற்றினார்கள். அவர் கதி என்ன ஆனது?
நம்பகதன்மையற்ற தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எத்தனை அணிகள் வேண்டுமானாலும வரலாம். இரு அணிகளை மக்கள் ஏற்பார்கள்.
மூன்றாவது அணியை மக்கள் ஏற்கமாட்மார்கள். இதை ஏற்கனவே நாங்கள் பரிசீலித்து பார்த்து விட்டோம். தமிழகத்தில் இரு அணிகளுக்கு இடையில் மட்டும் போட்டி. கடந்த காலங்களை போல 2026 திமுக மதசார்பற்ற முற்போற்கு கூட்டணியை வெற்றி பெறும்
தவெக தலைவர் விஜய் முதல்வர் வேட்பாளர் என தெரிவிக்கப்பட்டு இருப்பது குறித்த கேள்விக்கு, கனவு காண உரிமை உண்டு என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பதிலளித்தார்.
