ARTICLE AD BOX
டாப் நடிகர்
தெலுங்கு சினிமா உலகின் டாப் நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்டிஆர். இவர் சமீபத்தில் பாலிவுட்டில் வெளிவந்த “வார் 2” திரைப்படத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் பேன் இந்திய நடிகராக உருமாறினார். இவர் தற்போது பிரசாந்த் நீல் இயக்கும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஜூனியர் என்டிஆரின் பென்சில் ஓவியம் ஒன்று ஒரு லட்ச ரூபாய்க்கு விற்பனையாகியுள்ள செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அசத்தலான பென்சில் ஓவியம்
பியூலா ரூபி என்ற பிரபல பெண் ஓவியர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில் தான் வரைந்த ஜூனியர் என்டிஆரின் பென்சில் ஓவியம் 1650 அமெரிக்கன் டாலருக்கு விற்பனையாகியுள்ளதாக மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இது இந்திய மதிப்பு படி ரூ.1,45,300 ஆகும்.
History made! NTR ART ATR 🔥
Feeling absolutely speechless… Never in my dreams did I imagine my pencil art would create history. Today, My pencil art of our man of masses @tarak9999 is now the most expensive pencil art of a Telugu actor ever sold !! #JRNTR𓃵
Grateful and… pic.twitter.com/qStUDcw3kT
இது குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பியூலா ரூபி, “என்னிடம் பேச வார்த்தைகளே இல்லை. எனது பென்சில் கலை ஒரு வரலாற்றையே உருவாக்கும் என நினைத்துப் பார்த்ததில்லை. இன்று எனது ஜூனியர் என்டிஆரின் பென்சில் ஓவியம் இதுவரை விற்கப்பட்டதிலேயே மிக அதிக விலைக்கு விற்பனையான தெலுங்கு நடிகரின் ஓவியம் ஆகும்” என தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். இச்செய்தி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலரும் பியூலா ரூபிக்கு தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
