நம்பி வந்தவர்களை நடுவழியில் இறக்கிவிட்டு போனவர்தான் இபிஎஸ் : அமைச்சர் சாடல்!

6 hours ago 3
ARTICLE AD BOX

புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்த பின்னர் செய்தியாளர்டன் பேசிய அமைச்சர் ரகுபதி, தன்னை நம்பி வந்தவர்கள் எல்லாம் நடுவழியிலேயே இறக்கிவிட்டு போபவர்தான் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு நேற்றைய டெல்லி பயணமே உதாரணம் என கூறினார்.

மேலும் பேசிய அவர், நாலரை ஆண்டு கால ஆட்சியை காப்பாற்றியது பாஜக தான் அதற்கு நன்றி காட்ட தான் அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்று கூறும் எடப்பாடி பழனிசாமி ஏன் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை கழட்டிவிட்டார் இதற்கு அவர் பதில் கூற வேண்டும்.

முகத்தை மூடிக்கொண்டு யார் செல்வார்கள் முகத்தை மூடிக்கொண்டு பலர் திரிந்து வருகின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் ஒரு அரசியல்வாதியாக இருந்து கொண்டு நேற்றைய தினம் முகத்தை மூடிக்கொண்டு அமித்ஷா வீட்டிலிருந்து எடப்பாடி வந்துள்ளது பொது வழியிலேயே நாம் எப்படி முகத்தை காட்ட முடியும் என்று முடிவு செய்துவிட்டாரா?

உள்ளே நடந்தது என்ன என்பது நமக்கு தெரியாது ஆனால் முகத்தை மூடிக்கொண்டு வந்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முகத்தை மூடிக் கொண்டு வந்தால் உள்ளே வெட்கப்பட்டு அசிங்கப்பட்டு வந்ததாக தான் நினைக்க முடியும். கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்பவர் தான் முதல்வர். 2026 தேர்தலில் திமுக கூட்டணி விட்டு தானாக முதல்வர் யாரையும் அனுப்ப மாட்டார்

விஜய்க்கு வரும் கூட்டத்தை வைத்து அவருக்கு வாக்குகள் வரும் என்று கூற முடியாது. சினிமா நடிகர்களுக்கு என்ற கவர்ச்சியில் அவருக்கு கூட்டம் சேருகிறது . 2026 தேர்தலில் விஜயால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது..

அதிமுகவை பாஜகவிடம் எடப்பாடி அடகு வைத்து விட்டார். ஆனால் இதை தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எடப்பாடி தான் ஆட்சி அதிகாரத்திற்கு இனி வர முடியாது என்ற காரணத்தால் தான் தன்மானம் குறித்து தற்போது பேசுகிறார் .

விஜய்க்கு காவல்துறை அனுமதி அளித்தாலும் காவல்துறை இருக்கும் கட்டுப்பாடுகளை அவர் மீறுகிறார். அவருடைய ரசிகர்கள் கட்டுப்பாடற்ற முறையில் நடந்து கொள்கின்றனர் என்பது தான் அவருக்கு கெடுபிடிகள் அதிகரிக்கப்படுகிறது

அமைதியான முறையில் ரோடு ஷோ நடத்தினால் எந்த விதமான பிரச்சினையும் கிடையாது முதலமைச்சர் நடத்தும் ரோடு ஷோவால் எந்தவிதமான பிரச்சனையும் மக்களுக்கு ஏற்படவில்லை அமைதியான முறையில் தான் நாங்கள் நடத்துகிறோம் . மக்களுக்கு பயன் தருவதற்காக கட்டுப்பாடோடு திமுக முதல்வர் ரோட் ஷோ நடத்துகிறார்

கட்டுப்பாடு மீறுகின்ற போதுதான் விஜய் நடத்திய ரோடு ஷோ போன்று அசம்பாவிதங்கள் நடக்கின்றன.

2026 -ல் உண்மையான சமத்துவ ஆட்சியை அதிமுக அமைக்கும் என்று எடப்பாடி கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், 2026 தேர்தலில் திமுக தான் சமத்துவ ஆட்சியை அமைக்கிறோம் . இதை ஒப்புக்கொண்ட எடப்பாடிக்கு நன்றி

  • TTF Vasan's video of marrying his uncle's daughter after dumping his girlfriend!! டிடிஎஃப் வாசன் திடீர் திருமணம்…காதலி ஜோயாவுக்கு அல்வா? தீயாய் பரவும் வீடியோ.. !
  • Continue Reading

    Read Entire Article