ARTICLE AD BOX
ராஷ்மிகா மந்தனாவின் புதிய கெட்டப்பில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பிசியான நடிகை
தென்னிந்தியாவின் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. தொடக்கத்தில் கன்னடத்தில் அறிமுகமான இவர், அதனை தொடர்ந்து தெலுங்கில் இவர் நடித்த “கீதா கோவிந்தம்” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்ற நிலையில் ரசிகர்களின் மத்தியில் மிகப் பிரபலமானார். அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என தற்போது கலக்கி வருகிறார்.
தற்போது “தாமா” என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படம் ஒன்று கவனத்தை ஈர்த்துள்ளது.

புதிய கெட்டப்பில் ராஷ்மிகா
அதாவது “The Dirty” என்ற பத்திரிக்கைக்காக புதிய கெட்டப் ஒன்றில் எடுக்கப்பட்ட ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதில் புதிய தோற்றத்துடன் ஆளே அடையாளம் தெரியாதது போல் உள்ளார் ராஷ்மிகா மந்தனா. அப்புகைப்படம் இதோ…