ARTICLE AD BOX
ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி
ரஜினிகாந்த் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இத்திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இத்திரைப்படத்தின் டிரெயிலர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ஆடியோ முழுவதும் வெளிவந்துள்ளது.

எத்தனை பாடல்கள்?
“கூலி” திரைப்படத்தில் மொத்தம் 8 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் “Chitiku”, “மோனிகா”, “பவர் ஹவுஸ்” ஆகிய பாடல்கள் ஏற்கனவே சிங்கிள்களாக வெளியாகிவிட்டன. இப்பாடல்கள் உள்ளிட்ட 8 பாடல்கள் மொத்தம் வெளிவந்துள்ளது.
அனிருத்தின் இசையில் விஷ்ணு எடாவன், ஹைசன்பர்க், அறிவு ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். இத்திரைப்படத்தில் 8 பாடல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் 3 பாடல்களை மட்டுமே சிங்கிள்களாக வெளியிட்டனர்.
— Sun Pictures (@sunpictures) August 2, 2025ஆதலால் ரசிகர்களோ இத்திரைப்படத்தில் மூன்று பாடல்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளதாக முடிவு செய்துவிட்டனர். அந்த வகையில் தற்போது 8 பாடல்கள் இடம்பெற்றுள்ளது ரசிகர்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் மீதமுள்ள பாடல்களை ஏன் சிங்கிள்களாக வெளியிடவில்லை என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர். இத்திரைப்படத்தின் பாடல்களை Spotify, Youtube Music போன்ற ஆப்களில் கேட்டு ரசிக்கலாம்.
நம்மள ஏமாத்திட்டாங்க சித்தப்பா? கூலி பாடல்களை கேட்டுவிட்டு புலம்பும் ரசிகர்கள்!
                  
                        3 months ago
                                39
                    








                        English (US)  ·