நயன்தாராவுக்கு வில்லனாகும் பிரபல ஹீரோ…மூக்குத்தி அம்மன் 2 படத்தில் தரமான சம்பவம் இருக்கு.!

2 weeks ago 14
ARTICLE AD BOX

அடுத்தடுத்து வில்லன் ரோல்களில் நடிக்கும் அருண் விஜய்

தமிழ் சினிமாவில் பல கமர்சியல் படங்களை இயக்கி ரசிகர்களை குதூகலப்படுத்தி வருபவர் இயக்குனர் சுந்தர் சி.

கடைசியில் இவருடைய இயக்கத்தில் வெளிவந்த மதகதராஜா திரைப்படம் 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வசூலை தந்த நிலையில்,தற்போது தன்னுடைய அடுத்தடுத்து படங்களை இயக்க மும்மரம் காட்டி வருகிறார்.

இதையும் படியுங்க: இரவில் மட்டுமே ஷூட்டிங்…கொரோனா காலத்திலும் 200 கோடி வேட்டையாடி சாதனை படைத்த படம்.!

அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியானது.இந்த நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை சுந்தர் சி இயக்கவுள்ளார்.

Mookuthi Amman 2 Movie Update

100 கோடி பட்ஜெட்டில் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திலும் நயன்தாராவே நடிக்கிறார்,படப்பிடிப்பு மார்ச் 6 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில்,இப்படத்தில் வில்லன் ரோலை யார் நடிக்க வைப்பது என்று படக்குழு திட்டமிட்டு வருகிறது.

இதற்காக அருண் விஜயை படக்குழு அணுகியுள்ளது,ஏற்கனவே இவர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வில்லன் ரோலில் அசத்தினார்,தற்போது தனுஷின் இட்லிக்கடை படத்திலும் வில்லன் ரோலை எடுத்து நடித்து வருகிறார்.

இவருடைய மார்க்கெட் மின்னல் வேகத்தில் உயர்ந்துள்ளது,இதனால் மூக்குத்தி அம்மன் 2-ல் நயன்தாராவுக்கு வில்லனாக நடிக்க அதிக சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது.இதனால் தயாரிப்பு நிறுவனம் அவரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

  • Arun Vijay Villain Roles நயன்தாராவுக்கு வில்லனாகும் பிரபல ஹீரோ…மூக்குத்தி அம்மன் 2 படத்தில் தரமான சம்பவம் இருக்கு.!
  • Continue Reading

    Read Entire Article