ARTICLE AD BOX
தனுஷ்-நயன்தாரா மோதல்?
நயன்தாராவின் திருமணம் தொடர்பான ஆவணப்படத்தில் “நானும் ரவுடிதான்” திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இடம்பெற்றிருந்த நிலையில் தனக்கு ரூ.10 கோடி நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என தனுஷ் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதனை தொடர்ந்து நயன்தாரா தனுஷை கண்டபடி விமர்சித்து ஒரு அறிக்கை வெளியிட, சமூக வலைத்தளமே சூடுபிடித்துக்கொண்டது. தாங்கள் பல முறை முயன்றும் தனுஷ் என் ஓ சி வழங்க மறுத்துவிட்டார் எனவும் நயன்தாரா கூறினார். அதற்கு தனுஷ், நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் முறையாக என் ஓ சி கேட்கவில்லை என கூறினார். இவ்வாறு நயன்தாராவும் தனுஷும் மாறி மாறி அறிக்கை வெளியிட்டுக்கொண்டிருந்தனர்.

பிரபல யூட்யூபருக்கு என் ஓ சி
இந்த நிலையில் பிரபல யூட்யூபர் விஜே சித்து நடிக்கும் “டயங்கரம்” திரைப்படத்திற்காக தனுஷ் எந்த வித பணமும் வாங்காமல் என் ஓ சி கொடுத்திருக்கிறாராம். “டயங்கரம்” திரைப்படத்தை விஜே சித்து நடித்து இயக்கியும் வருகிறார். இத்திரைப்படத்தில் “வேலையில்லா பட்டதாரி” படத்தின் இன்ட்ரோ பாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாம். இதற்காக தனுஷிடம் என் ஓ சி கேட்டபோது எந்த பணமும் வாங்காமல் என் ஓ சி கொடுத்திருக்கிறார்.
நயன்தாராவுக்கு ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்ட தனுஷ் விஜே சித்துவுக்கு எந்த பணமும் வாங்காமல் என் ஓ சி கொடுத்தது தற்போது பேசுபொருளாகியுள்ளது. இதற்கு முன் வெற்றிமாறன் சிம்புவை வைத்து இயக்கும் திரைப்படத்திற்கு “வடசென்னை” படத்தின் காட்சிகளை பயன்படுத்த தனுஷ் எந்த பணமும் வாங்காமல் என் ஓ சி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
