ARTICLE AD BOX
அதிமுக உடன் மீண்டும் பாஜக கூட்டணி போடுவதாக நேற்று சென்னை வந்த அமித்ஷா கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதையும் படியுங்க: தே.ஜ கூட்டணிக்கு வாங்க… முக்கிய கட்சியிடம் பேச்சுவார்த்தை நடத்தும் எடப்பாடி பழனிசாமி!
இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடக்கும் நிலையில், அதிமுக அடுத்தடுத்து வியூகம் அமைத்து வருகிறது.
அதே போல எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் கூட்டணி என அமித்ஷா அறிவித்திருந்தார். இதனால் அவர்தான் முதல்வர் வேட்பாளர் என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பு கருத்தை பதிவு செய்துள்ளார். சுப்பிரமணியன் சுவாமி தனது X தளப்பக்கத்தில், பாஜக – அதிமுக கூட்டணியை நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கினால் நிச்சயம் வரும் 2026 தேர்தலில் வெற்றி என்றும், அதே சமயம் முதலமைச்சர் வேட்பாளராக நயினார் நாகேந்திரனை அறிவித்தால், 3ல் 2 பங்கு வெற்றி கிடைக்கும் என பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே அண்ணாமலையால் பாஜக உடன் கூட்டணியை முறித்து கொண்ட அதிமுக தற்போதுதான் சேர்ந்துள்ளது. அதற்குள் பாஜக மூத்த தலைவர் கொளுத்தி போட்ட இந்த வெடி எப்படி பற்ற போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tags: AIADMK BJP alliance, dmk, nainar nagendran, Politics, Subramanian Swami, அஇஅதிமுக, அதிமுக பாஜக கூட்டணி, அரசியல், சுப்பிரமணியன் சுவாமி, திமுக, நயினார் நாகேந்திரன், முதல்வர் வேட்பாளர்