ARTICLE AD BOX

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தேர்வாய் கிராமத்தில் நேற்று (22.08.2025) நள்ளிரவு நடந்த சம்பவம் கிராமத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
தேர்வாய் பகுதியில் JAIF சர்ச் தெருவில் வசிக்கும் பாஞ்சாலை என்கிற தட்டாரம்மா என்ற முதிய பெண் தனது வாடகை வீட்டில் இருந்தபோது, நள்ளிரவு 1.00 மணியளவில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
மூதாட்டியை அடித்து, வாயை துணியால் அடைத்து, கொடூரமாக சித்தரவதை செய்து, உடைகளை கிழித்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். சம்பவத்துக்குப் பிறகு குற்றவாளி தப்பிச் சென்றுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கிராம மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் கூட பாதுகாப்பின்றி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதாகவும், இது ஆரம்பாக்கம் கிராமத்தில் ஏற்கனவே நடந்த 8 வயது சிறுமி பாலியல் சீண்டல் சம்பவத்தை நினைவூட்டுவதாகவும் மக்கள் தெரிவித்தனர்..
இதையடுத்து, பாதிரிவேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை பதிவு செய்த காவல்துறையினர், தப்பிச் சென்ற வட மாநில நபரை விரைவில் பிடித்து, உரிய விசாரணை நடத்தி, குற்றவாளி கடுமையாக தண்டிக்கப்படுவார் என கிராம மக்களிடம் உறுதி அளித்துள்ளனர்.
இந்தக் கொடூரச் சம்பவம் தேர்வாய் கிராமத்தையே கவலையும் கோபமும் அடையச் செய்துள்ளது.
The station நள்ளிரவில் தனியாக வசித்த மூதாட்டி பாலியல் வன்கொடுமை..வடமாநில இளைஞரின் வெறிச்செயல்! appeared archetypal connected Update News 360 | Tamil News Online.