ARTICLE AD BOX
நடிகை சமந்தா சினிமாவில் அறிமுகமான பின் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து முன்னணி நடிகையானார். நடிக்கும் போதே நாகசைதன்யாவுடன் காதல் ஏற்பட்டது.
இந்த காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதிக்க, இருவருரின் திருமணம் படு ஜோராக நடந்தது. ஆனால் 4 வருடத்தில் இந்த ஜோடிக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு விவாகரத்தில் முடிந்தது.
இதையும் படியுங்க : சூப்பர் ஸ்டார் படத்தில் இருந்து விலகிய தயாரிப்பு நிறுவனம்.. ரஜினி, அஜித்தால் திவால் ஆகிறதா?
ஒரு பக்கம் மனவேதனையில் தவித்த சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சினிமாவில் இருந்து தற்காலிக ஓய்வெடுத்தார்.
ஆனால் நாகசைதன்யா நடிகை சோபிதாவுடன் டேட்டிங் சென்று, இருவரும் காதல் வயப்பட்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர்.
சமந்தாவோ நினைவுகளை அழிக்க முடியாமல் இருந்த நிலையில், இருவரும் காதலிக்கும் போது கையில் குத்திக் கொண்ட டாட்டூ ஒன்று வைரலாகி வந்தது
சமந்தா அதை தற்போதுதான் அழித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இவ்வளவு நாளா சமந்தா, நாக சைதன்யா மீது பிரியாமாகத்தான் இருந்துள்ளார் என நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.

7 months ago
68









English (US) ·