நாக்பூர் வன்முறைக்கு Chhaava படமும் காரணமா? என்ன நடந்தது?

1 month ago 27
ARTICLE AD BOX

நாக்பூரில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், இதன் பின்னணி குறித்து பார்க்கலாம்.

நாக்பூர்: மகா​ராஷ்டிரா சத்​ரபதி சம்​பாஜி நகர் மாவட்​டத்தின் குல்​தா​பாத்​தில் முகலாய மன்​னர் அவுரங்​கசீப்பின் சமாதி உள்​ளது. கடந்த 1707ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி அவுரங்​கசீப் இறந்​த​ பிறகு, அவரது விருப்​பத்​தின் பெயரில் இங்கு அவரது உடல் புதைக்கப்பட்டது. இந்தக் கல்​லறையை பொது​மக்​கள் பார்​வை​யிட்டுச் செல்லும் நிலையில், இந்​திய தொல்லியல் துறை​யால் பாது​காக்​கப்​பட்ட வரலாற்றுச் சின்​ன​மாக கல்​லறை உள்​ளது.

இந்த நிலையில், இந்த சமாதியை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மேலும், பாலிவுட் வரலாற்றுத் திரைப்​படமான​ ‘சாவா’ ​தான் அவுரங்​கசீப் கல்லறையை அகற்ற வேண்​டும் என்​ப​தற்கு காரண​மாக மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏனென்றால், சத்​ரபதி சிவாஜி​யின் மகன் சம்​பாஜி மகராஜின் கதையான இந்தப் ​படம் குறித்து மகா​ராஷ்டி​ரா​ பட்​ஜெட் கூட்​டத்​தொடரில் விவாதம் எழுந்​தது.

அப்​போது சமாஜ்​வாதி எம்எல்ஏ அபு ஹாஸ்மி, “பலரும் நினைப்​பது போல் அவுரங்கசீப்பை நான் கொடுங்​கோலர் எனக் கருத மாட்​டேன். சமீபத்​திய ஆட்சியாளர்களாலும், திரைப்​படங்​களாலும் அவரது பெயருக்கு களங்​கம் கற்பிக்கப்படுகிறது” எனக் கூறி​னார்.

Nagpur Violence

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், அபு ஹாஸ்மி மார்ச் 26 வரை பட்​ஜெட் கூட்​டத்​தொடர் முழு​வ​தி​லும்​ இருந்​து நீக்​கி வைக்​கப்​பட்​டுள்​ளார்​. இதனிடையே, அவுரங்​கசீப் சமா​தியை அகற்ற முதலமைச்சர் தேவேந்​திர பட்​னா​விஸும் ஆதரவு அளித்​துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பேரனோட படிப்பு போச்சு.. தனுஷை மேடையில் கிழித்தெடுத்த தந்தை கஸ்தூரி ராஜா!

மேலும், இந்தப் பிரச்னையில் இந்துத்துவா அமைப்புகளுக்கு உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் இரு பிரிவுகளும், ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், காங்கிரஸ் கட்சி மட்டும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

அது மட்டுமல்லாமல், விஸ்வ இந்து பரிஷத் மாநிலச் செயலாளர் கிஷோர் சவான், பஜ்ரங் தளத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் நிதின் மகாஜன் ஆகியோர், அவுரங்கசீப் சமாதி அகற்றப்படவில்லை என்றால் அயோத்தியில் பாபர் மசூதியை கரசேவையில் இடித்தது போல் அவுரங்கசீப் சமாதியை அகற்றுவோம் என்று தெரிவித்தது கவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில் நாக்பூரில் கலவரம் மூண்டு தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

  • Father Kasthuri Raja who tore Dhanush apart on stage பேரனோட படிப்பு போச்சு.. தனுஷை மேடையில் கிழித்தெடுத்த தந்தை கஸ்தூரி ராஜா!
  • Continue Reading

    Read Entire Article