ARTICLE AD BOX
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை: சேலம் ஆத்தூரில், அதிமுக உறுப்பினர்கள் சேர்க்கைக் கூட்டம், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போ,துஅதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்குமா என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த இபிஎஸ், “திமுகவை வீழ்த்துவதற்கு அதிமுக தயாராக உள்ளது. திமுக மட்டும்தான் எங்களுக்கு எதிரி. மற்ற கட்சிகள் எதுவும் எதிரி இல்லை. திமுகவை வீழ்த்த வேண்டும், அதுதான் எங்கள் குறிக்கோள். அதிமுக கூட்டணி குறித்து தேர்தலுக்கு முன்பாக ஆறு மாதங்கள் இருக்கும்போது கூறப்படும்.
திமுக ஆட்சியில் என்ன செய்தார்கள்? திமுக கவர்ச்சி பேசக்கூடிய கட்சி மட்டுமே. பேச்சு மட்டும்தான் உள்ளது, செயலில் பூஜ்ஜியம் தான். திமுக வார்த்தை ஜாலங்களில் வல்லவர்கள், அப்பா அப்பா என்று சொன்னால் குடும்பத்தில் பிரச்னை வந்துவிடும், முதல்வராக அதை அவரே உணர வேண்டும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்படுமா எனக் கேட்டதற்கு, “தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் குறித்து நாங்கள் எதுவும் அறிவிப்பு வெளியிடவில்லை. திமுகவினர் சோதனை வந்துவிடும் என்ற பயத்தில் இருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தால் நிதி வந்துவிடுமா? நாடாளுமன்றத்தில் பேசினால்தான் தீர்வு கிடைக்கும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: விஜய் போல பாஜக பகல் கனவு காண்கிறது.. ஜெயக்குமார் சரமாரி பேச்சு!
பிரேமலதா – அண்ணாமலை ரியாக்ஷன்: முன்னதாக, கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி சென்னையில் நடந்த விழாவின் போது, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “அதிமுகவுடன் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி அமைந்தபோதே தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் உறுதியாகிவிட்டது. அந்தத் தேர்தல் வரும் போது எங்கள் கட்சியில் இருந்து யாரை டெல்லிக்கு அனுப்பப் போகிறோம் என்பதை அறிவிப்போம்” எனத் தெரிவித்திருந்தார்.
ஆனால், எடப்பாடி பழனிசாமியோ அப்படி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை எனக் கூறியிருப்பது குறித்து இன்று பிரேமலதா விஜயகாந்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்காமல் சென்றார். அதேநேரம், அதிமுக உடன் பாஜக மீண்டும் கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு, “இது அவசரத்தில் பேச வேண்டிய சப்ஜெக்ட் இல்லை” எனக் கூறிவிட்டு புறப்பட்டார், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

8 months ago
71









English (US) ·