நாடாளுமன்ற புலி வைகோதான்… எம்பி பதவி கிடைக்காததால் கூட்டணி முறிவு? துரை வைகோ கருத்து!

1 month ago 26
ARTICLE AD BOX

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் முதன்மைச் செயலாளருமான துரை வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், வைகோ 1978 ஆம் ஆண்டு அவர் 34 ஆம் வயதில் நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்தார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் பணியாற்றினார்.

நதி நீர் இணைப்பு குறித்து யாரும் சிந்திக்காத காலங்களில் தனி நபர் மசோதாவை கொண்டு வந்தவர் வைகோ, மே 1 ஊதியத்துடன் விடுமுறை, என்.எல்.சி தனியார்மயமாக்கலை தடுத்தது, ரயில்களில் டி.டி.ஆருக்கு படிக்கை வசதி, நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் புகைப்படம் வைக்க குரல் கொடுத்தது, ஈழ தமிழர்களுக்காக குரல் கொடுத்தது என பலவற்றில் பங்காற்றியவர் வைகோ.

1978 ஆம் ஆண்டு முதன்முதலாக நாடாளுமன்றத்தில் சென்றபோது ஹிந்தி திணிப்புக்கு எதிராக பேசினார் தற்பொழுது தன்னுடைய 81 வது வயதில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடியும் நேரத்திலும் கூட மும்மொழி கொள்கைக்கும், இந்தி திணிப்புக்கும் எதிராக பேசினார். மூன்று முறை ஒன்றிய அமைச்சர் பதவி தேடி வந்த பொழுதும் அதை மறுத்தவர் வைகோ.

அந்த தலைவருக்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக வாய்ப்பு அளிக்காதது எங்களுக்கு வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. பொன் குடம் உடைந்தாலும் அது பொன் குடம் தான்.

பாராளுமன்ற புலி வைகோ தான். வைகோவிற்கு பதவி ஒரு பொருட்டல்ல, மக்கள் பணி எப்போதும் தொடரும். நாங்கள் கடந்த ஆண்டு தேர்தல் நேரத்திலேயே மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்டோம். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என திமுக தலைமை தெரிவித்தார்கள்.

மாநிலங்களவை கிடைக்கும் என நம்பினோம். ஆனால் இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் எங்களுக்கு வருத்தம் உள்ளது. தமிழ்நாட்டு நலன் கருதி நாங்கள் அதை கடந்து செல்வோம். கூட்டணியில் தொடருவோம்.

தமிழ்நாட்டின் நலனுக்காக கூட்டணியில் இணைந்து பணியாற்றுகிறோம். சட்டமன்ற தேர்தலில் வைகோ போட்டியிடுவது குறித்து அவரும் கட்சி தலைமையும் தான் முடிவெடுப்பார்கள்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சாதாரண மக்கள் தான் பாதிக்கப்பட்டார்கள். அதனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. மீண்டும் அது போன்ற நடவடிக்கைகள் தேவையில்லாதது.

ஜீன் 22 மதிமுக பொதுக்குழு நடைபெற உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றி அங்கீகாரம் பெறுவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அதில் விவாதிக்க உள்ளோம்.

ராமதாசுக்கும் அன்புமணிக்கும் இடையே உள்ள பிரச்சனை அவர்கள் கட்சி சார்ந்தது அதிக நான் கருத்து கூறுவது ஆரோக்கியமானதாக இருக்காது. நான் கருத்து கூறுவது நாகரீகமற்றது.

பெண்கள் வாழ தகுதியற்ற மாநிலம் தமிழ்நாடு என கூறும் நயினார் நாகேந்திரன் மற்ற மாநிலங்களுக்கு சென்று பார்க்கட்டும் அங்கு நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தான் அதிகம். இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக உள்ள மாநிலம் தமிழ்நாடு தான் என தெரிவித்தார்.

பேடியின் போது முழு நிர்வாகி மருத்துவர் ரெக்கையா, மாவட்ட
செயலாளர்கள் வெள்ளமண்டி சோமு, மணவை மாணிக்கம் ஆகிருடன் இருந்தனர்.

  • vijay said that neet only is not important in kalvi virudhu function நீட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் விஜய்? கல்வி விழாவில் பேசிய பேச்சால் பரபரப்பான நெட்டிசன்கள்!
  • Continue Reading

    Read Entire Article