ARTICLE AD BOX
பகல்காம் தாக்குதலில் சுற்றுலாபயணிகள் 26 பேர் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தான் மீது இந்தியா போரை தொடுக்க முன்வந்தது.
இதையும் படியுங்க: மீண்டும் அமைச்சரவை மாற்றம்… அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி இலாகா மாற்றம்!!
இதையடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன். இதற்கு பதிலடி தரும் வகையில் தொடர்ந்து பாகிஸ்தான், பூஞ்ச் பகுதியில் நேற்று தாக்குதலை நடத்தியது.
இப்படி தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே தாக்குதல் நடந்து வருகிறது. இதனால் நாட்டில் உள்ள முக்கியமான 21 விமான நிலையங்களை மே 10 வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ஸ்ரீநகர், ஜம்மு, லே, அமிர்தசரஸ், பதான்கோட், சண்டீகீர், ஜோத்பூர், ஜெய்சால்மர், சிம்லா, தர்மசாலா, ஜாம் நகர், கிஷண்கர், ராஜ்கோட், பிகானீர், குவாலியர் உட்பட வட மற்றும் மேற்கு இந்திய பகுதிகளில் உள்ள விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

வட இந்தியா மற்றும் மேற்கு இந்தியா பகுதிகளில் இயக்கப்பட்டு வந்த விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வரும் மே 10ஆம் தேதி வரை இந்த நகரங்களில் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவலை ஏர் இந்தியா, இண்டிகோ, ஆகாசா போன்ற விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பயணிகளின் கட்டணம் திரும்ப அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.