ARTICLE AD BOX
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அருகே உள்ள மேல் மதூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை. இவர் நேற்று இரவு அவருடைய மருமகனுக்கு கோழி அடித்து குழம்பு வைப்பதற்காக அவர் வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் கோழியை சுட்டு உள்ளார்.
ஆனால் குறி தவறி பக்கத்து வீட்டில் இருந்த பிரகாஷ் தலைமீது துப்பாக்கி குண்டு பாய்ந்து பிரகாஷ் சம்பவ இடத்திலே துடிதுடித்து உயிரிழந்தார்.
இது குறித்து கரியாலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக அண்ணாமலை மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 3 பேர் என மொத்தமாக 4 பேரிடம் கரியாலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் சம்பவத்தில் தொடர்புடைய கோழியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கோழியை சுடும்போது குறி தவறி பிரகாஷ் மீது குண்டு பாய்ந்ததா அல்லது இருவருக்கும் ஏற்கனவே ஏதாவது முன் விரோதம் உள்ளதா என்பது குறித்தும் கரியாலூர் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
