ARTICLE AD BOX
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இலுப்பையூரணி காட்டுப் பகுதியில் வாலிபர் ஒருவர், நாட்டு வெடிகுண்டு தயாரித்து அதை வீசி வெடிக்கச் செய்து, அந்தக் காட்சியை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பியதாகவும், இன்ஸ்டாகிராமில் இளைஞா்கள், இளஞ்சிறாா்களை சோ்த்து அரிவாள், வாள்களை வைத்து ரீல்ஸ் பதிவிட்டு சமூக வலைதளங்களில் பதற்றம், அச்சத்தை ஏற்படுத்தி வருவதாகவும் புகார் வந்தது.
இதன் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இலுப்பையூரணி மறவா் காலனியைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் குமார் (23) என்பவர் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வீடியோ வெளியிட்டது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து குமாரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள குமார் மீது 13வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் 4 இளம் சிறார்களை போலீசார் தேடி வருகின்றனர்.

1 month ago
32









English (US) ·