ARTICLE AD BOX
நஷ்டத்தில் தத்தளிக்கும் லைகா
லைகா நிறுவனம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்ததை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தது. “கத்தி”, “கோலமாவு கோகிலா”, “செக்க சிவந்த வானம்”, “வடசென்னை”, “பொன்னியின் செல்வன் 1” போன்ற திரைப்படங்கள் லைகா தயாரிப்பில் மிகப்பெரிய வெற்றித் திரைப்படங்களாக அமைந்தது. ஆனால் ஒரு காலகட்டத்திற்கு பிறகு லைகா நிறுவனம் தயாரித்த திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவின. அதுவும் சமீப காலமாக “லால் சலாம்” “இந்தியன் 2”, “விடாமுயற்சி” போன்ற திரைப்படங்கள் நஷ்டத்தை கொடுத்த திரைப்படமாக அமைந்தது. இதனால் லைகா பொருளாதார சிக்கலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

லைகாவுக்கு கை கொடுக்கும் ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் லைகா தயாரிப்பில், “2.0”, “தர்பார்”, “லால் சலாம்”, “வேட்டையன்” போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் “2.0”, “வேட்டையன்” போன்ற திரைப்படங்கள் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படமாக அமைந்தது. இந்த நிலையில் பொருளாதார சிக்கலில் இருக்கும் லைகா நிறுவனத்திற்கு மீண்டும் கைக்கொடுக்க உள்ளாராம் ரஜினிகாந்த்.
“ஜெயிலர் 2” திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்க உள்ள திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. லைகா நிறுவனம் தற்போது ஜேசன் சஞ்சய் இயக்கி வரும் திரைப்படத்தையும் “இந்தியன் 3” திரைப்படத்தையும் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் தற்போது “கூலி” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனை தொடர்ந்து “ஜெயிலர் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
