ARTICLE AD BOX
எல்லாம் என்னோட மகனுக்காகத்தான்
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக வலம் வந்த நெப்போலியன், தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அவரது மூத்த மகன் தனுஷ் Muscular Dystrophy என்ற தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர். அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தசைகள் வலுவிழக்க தொடங்கிவிடும். அவர்களால் நடக்க கூட முடியாது. தனது மூத்த மகனின் மருத்துவம் மற்றும் அவரது வசதிக்காகவே அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார் நெப்போலியன்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது மகன் தனுஷுக்கு திருமணம் செய்துவைத்தார். அத்திருமணத்தை ஜப்பானில் கோலாகலமாக நடத்தினார். அத்திருமண நிகழ்வில் பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

தனுஷை நேரில் சந்தித்த கோபி-சுதாகர்
பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தனது நண்பரின் திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது நெப்போலியனின் மகன் தனுஷை சந்தித்து நலம் விசாரித்தார். மாதம்பட்டி ரங்கராஜ் தனது மகனை சந்தித்த வீடியோவை நெப்போலியன் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இதனை தொடர்ந்து பரிதாபங்கள் யூட்யூப் சேன்னல் நிறுவனர்களான கோபி-சுதாகர் தனுஷை சந்தித்து நலம் விசாரித்த வீடியோவை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார் நெப்போலியன். சென்ற வாரம் அமெரிக்காவில் நடைபெற்ற FetNa என்ற நிகழ்ச்சியில் கோபி-சுதாகர் கலந்துகொண்ட நிலையில் அந்த நிகழ்ச்சியில் நெப்போலியனும் கலந்துகொண்டார். அப்போது நெப்போலியன் கோபி-சுதாகரிடம், “என்னுடைய மகன் உங்கள் ரசிகன். நீங்கள் எனது வீட்டிற்கு வரவேண்டும்” என அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட கோபி-சுதாகர் நெப்போலியனின் வீட்டிற்குச் சென்று அவரது மகன் தனுஷை சந்தித்து நலம் விசாரித்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
