ARTICLE AD BOX
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி
பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி தொலைக்காட்சி தொடர்கள் மட்டுமல்லாது பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில்தான் இந்திய கிரிக்கெட்டரான விராட் கோலி இவரது புகைப்படங்கள் பலவற்றுக்கும் வரிசையாக லைக் போட்டிருப்பதாக Screenshot-கள் வலம் வந்தன. இது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சைக்குள்ளான நிலையில் விராட் கோலியை பலரும் ட்ரோல் செய்யத் தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில் இது குறித்து விராட் கோலி தனது இன்ஸ்டா ஸ்டோரியில் விளக்கம் அளித்துள்ளார்.
நான் தப்பான ஆள் இல்லை

அதில், “இன்ஸ்டாகிராமில் சில பதிவுகளை நீக்கும்போது அதன் Algorithm தவறுதலாக சென்று இவ்வாறு ஆகியுள்ளது. இதற்கு பின்னணியில் எந்த நோக்கமும் இல்லை. தங்கள் புரிதலுக்கு நன்றி” என்று என விளக்கம் அளித்துள்ளார். எனினும் விராட் கோலியின் ஹேட்டர்ஸ் அவரை நோக்கி வன்ம அம்புகளை பாய்த்துக்கொண்டே வருகின்றனர்.