ARTICLE AD BOX
ரகசிய உறவு குறித்து மனம் திறந்த ரங்கராஜ் மனைவி
தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் மாதம்பட்டி ரங்கராஜ்,இப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தாலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் ஏதும் வராததால் தன்னுடைய அப்பாவின் சமையல் வேலையை கையில் எடுத்து,அதில் தன்னுடைய தனித்துவமான திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
சமீப காலமாக சினிமா பிரபலங்களின் திருமணங்கள்,அரசியல்வாதிகள் வீட்டு விசேஷங்கள் உட்பட பல நிகழ்ச்சிகளில் இவருடைய சமையல் ஆர்டரை புக் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்க: ஷங்கரை கை கழுவிய லைக்கா…இந்தியன் 3 ரிலீஸ் ஆகுமா..தொடரும் சிக்கல்.!
இவருக்கு திருமணம் ஆகி ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில்,சில நாட்களாக இவருக்கும் இவருடைய காஸ்டியூம் டிசைனாராக இருப்பவருக்கும் ரகசிய உறவு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது,அந்த பெண்மணியும் அவருடைய இன்ஸ்டாவில் ரங்கராஜ் போட்டோவை பதிவிட்டு உயிர்,காதலன் என்று பதிவிட்டு வருகிறார்.
இதைப்பற்றி ரங்கராஜ் எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில்,தற்போது அவருடைய மனைவி ஸ்ருதி தன்னுடைய இன்ஸ்டாவில் ரங்கராஜ் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு “நான் தான் அவருடைய மனைவி” என கூறியுள்ளார்.
இவருடைய பதிவிற்கு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.