ARTICLE AD BOX
மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான “தக் லைஃப்” திரைப்படம் மிகவும் மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டது. மணிரத்னம்-கமல்ஹாசன் காம்போவில் “நாயகன்” திரைப்படத்திற்குப் பிறகு 37 வருடங்கள் கழித்து “தக் லைஃப்” வெளிவருவதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு திரையரங்கத்திற்கு சென்றார்கள். ஆனால் அப்படி சென்ற ரசிகர்கள் ஏமாந்துப்போய்தான் வெளிவந்தார்கள். ரசிகர்களின் எதிர்பார்ப்பை அத்திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை.
ரூ.300 கோடி பொருட்செலவில் படமாக்கப்பட்ட இத்திரைப்படம் ரூ.90 கோடி வசூலை கூட தாண்டவில்லை. “இந்தியன் 2” ஒரு தோல்வி திரைப்படம் என்றாலும் ரூ.150 கோடி வசூலானது. ஆனால் “தக் லைஃப்” திரைப்படமோ ரூ.100 கோடியை கூட தொடவில்லை.
இந்த நிலையில் மணிரத்னம் ஒரு பேட்டியில் பேசியபோது, ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததை குறித்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என கூறியதாக ஒரு செய்து உலா வந்தது. இச்செய்தியை பல முன்னணி செய்தி ஊடகங்களிலும் இடம்பெற்றிருந்தது.
நிஜமாகவே மன்னிப்பு கேட்டாரா?
இந்த நிலையில் மணிரத்னம் மன்னிப்பு கேட்கவில்லை என மெட்ராஸ் டாக்கீஸ் தரப்பில் இருந்து விளக்கம் வந்துள்ளது. அதாவது “தக் லைஃப்” திரைப்படம் தொடர்பாக மணிரத்னம் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டதாக பரவி வரும் தகவல் தவறான தகவல் எனவும் அவர் யாரிடமும் மன்னிப்பு கேட்கவில்லை எனவும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து விளக்கம் வந்துள்ளது. இதன் மூலம் மணிரத்னம் மன்னிப்பு கேட்டதாக வெளிவந்த செய்தி பொய்யாக பரப்பிய செய்தி என தெரிய வருகிறது.