ARTICLE AD BOX
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நித்தியானந்தா கர்நாடகாவில் தனக்கென தனி சீடர் கூட்டத்தை உருவாக்கி ஒரு ஆசிரமத்தை எழுப்பினார்.
ஆன்மீக சொற்பொழிவாற்றி சீடர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல், வெளிநாட்டில் இருந்து ஏராளமானோர் இவரின் ஆன்மீக சொற்பொழிவுக்கு அடிமையாகினர். இதனால் பணமும், புகழும் அதிகரித்தது.
இதையும் படியுங்க: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே… நீங்க எதிர்பார்த்த தேர்வு : வெளியானது முக்கிய அறிவிப்பு!
ஆனால் வெகு சில நாட்களிலேயே இவர் மீது பல்வேறு பாலியல் புகார்கள் பெண் சீடர்களே கொடுத்தனர். பின்னர் பிரபல நடிகையுடன் இவர் இருந்த அந்தரங்க வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பின.
இதன் பின்னர் தேடப்படும் குற்றவாளியாக மாறிய நித்தியானந்தா, இந்தியாவில் இருந்து தலைமறைவானார். அவர் கைலாசா என்றொரு நாட்டை உருவாக்கி அதற்கு அதிபராக உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் கைலாசா நாடு எங்கு உள்ளது என்பது தற்போது வரை புரியாத புதிராகவே உள்ளது.

இந்த நிலையில்தான் நித்தியானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேஷ்வரன் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் பேசிய அவர், நித்தியானந்தா இறந்து 2 நாட்கள் ஆகிவிட்டதாக அதிர்ச்சி தகவலை கூறினார்.
மேலும் இந்து தர்மத்தை காப்பதற்காக அவர் இரு நாட்களுக்கு முன் உயிர்தியாகம் செய்ததாகவும், அந்த வீடியோவில் கூறியுள்ளார். இது உண்மையா இல்லையா? நித்தியானந்தா இறந்துவிட்டாரா? இல்லை வழக்குகளில் இருந்து தப்பிக்க ஏப்ரல் ஃபூல் செய்தாரா என்ற சந்தேகம் வலுக்கிறது.

நித்தியானந்தாவுக்கு சொத்து மதிப்பு ரூ.4000 கோடி என்ற தகவலும் இணையத்தில் கசிந்துள்ளது. அந்த சொத்து யாருக்கு? ஒரு வேளை அது ரஞ்சிதாவுக்குத்தான் போய் சேரும் என்ற பரபரப்பு தகவல்களும் உலா வருகிறது.
