ARTICLE AD BOX
நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது.இதை அடுத்து கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அந்த மாநில அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்க: மருமகளுடன் உல்லாசம்.. மறுத்ததால் மாமனார் வெறிச்செயல் : நடுங்கிப் போன நாமக்கல்!
கேரள மாநிலத்தில் கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியாக நிபா வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது.
 இந்நிலையில் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு பகுதியை சேர்ந்த 57 வயது நபர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
 அதன் எதிரொலியாக தமிழகம் கேரளா எல்லைப் பகுதியான வாளையார் சோதனை சாவடியில் கோவை மாவட்ட சுகாதாரக் குழுவினர் மற்றும் மருத்துவ குழுவினர் கேரளாவில் இருந்து வரும் பேருந்துகள், லாரிகள், நான்கு சக்கர வாகனம், இரு சக்கர வாகனங்கள் வரும் பயணிகளை தீவிர சோதனைக்கு பிறகு தமிழகத்திற்குள் அனுமதித்து வருகின்றனர். அதே போல கேரளாவில் இருந்து வரக் கூடிய நபர்களை மாஸ்க் அணிந்து வருமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
 
                        3 months ago
                                36
                    








                        English (US)  ·