ARTICLE AD BOX
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது சினிமா அறிமுகத்திலேயே அவர் வாங்கி இருக்கும் சம்பளம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.தெலுங்கு திரைப்படமான ‘ராபின்ஹுட்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதையும் படியுங்க: தோனியை நீக்குங்க..படு மோசம் CSK ரசிகர்கள்..இப்படியெல்லாமா பண்ணுவாங்க.!
நிதின்,ஸ்ரீலீலா மற்றும் கெட்டிகா ஷர்மா நடித்துள்ள ‘ராபின்ஹுட்’ திரைப்படத்தை வெங்கி குடுமுலா இயக்கியுள்ளார்.இப்படம் மார்ச் 28, 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது.டேவிட் வார்னர் இதில் மூன்று நிமிடங்கள் மட்டும் தோன்றியிருந்தாலும்,அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக டேவிட் வார்னர் 2.5 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.மேலும்,படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள 1 கோடி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மொத்தமாக அவர் 3.5 கோடி சம்பாதித்துள்ளார்,இந்த ஆண்டு ஐபிஎல் 2025 போட்டிக்காக எந்த அணியும் அவரை ஏலம் எடுக்காத நிலையில்,இந்த சம்பளம் அவருக்கு மிகப்பெரிய தொகையாக கருதப்படுகிறது.
இவர் ஏற்கனவே அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா பாடலுக்கு ரீல்ஸ் எடுத்து மிகப்பிரபலம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இனி வரக்கூடிய நாட்களில் டேவிட் வார்னர் அவருடைய சினிமா பயணத்தை தொடருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.