ARTICLE AD BOX
தெலுங்கின் மூத்த நடிகர்
“அல்லூரி சீத்தாராம ராஜு” என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் மோகன் பாபு. அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த அவர், தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகராக உயர்ந்தார்.
மோகன் பாபுவும் ரஜினிகாந்தும் மிக நெருங்கிய நண்பர்கள். இருவரும் திரைப்படப் பட்டறையில் ஒன்றாக பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் “தாய் மீது சத்தியம்”, “அன்னை ஒரு ஆலயம்”, “இரத்த பாசம்”, “குரு” போன்ற திரைப்படங்களில் மோகன் பாபு நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது சூர்யா நடித்த “சூரரை போற்று” திரைப்படத்தில் பக்தவட்சலம் நாயுடு என்ற சிறிய கதாபாத்திரத்திலும் அவர் நடித்திருந்தார்.
கண்ணப்பா
மோகன் பாபுவுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மகளான லட்சுமி மஞ்சு தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது இரு மகன்களான விஷ்ணு மஞ்சுவும் மனோஜ் மஞ்சுவும் தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக உள்ளனர்.
அந்த வகையில் விஷ்ணு மஞ்சு தற்போது “கண்ணப்பா” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இத்திரைப்படம் கண்ணப்ப நாயனாரின் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இதில் சரத்குமார், மதுபாலா, மோகன் பாபு, பிரம்மாஜி, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் இதில் மோகன்லால், பிரபாஸ், அக்சய் குமார், காஜல் அகர்வால் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருகிற ஜூன் 27 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
வைரல் வீடியோவால் பரபரப்பு
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் பிரம்மாஜியால் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ வைரல் ஆனது. அதில் மோகன் பாபு, தனது மகனுக்கு நியூஸிலாந்தில் 7000 ஏக்கர் நிலம் வாங்கியிருப்பதாக கூறியிருந்தார். இந்த வீடியோ அதிர்வலைகளை கிளப்பிய நிலையில் தற்போது நடிகர் பிரம்மாஜி இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள நடிகர் பிரம்மாஜி, “மோகன் பாபுவுடன் எடுக்கப்பட்ட வீடியோ ஒரு Fun-க்காக எடுக்கப்பட்ட வீடியோ. 7000 ஏக்கர் வாங்கியுள்ளதாக கூறியது ஒரு ஜோக்குக்காகத்தானே ஒழிய அதில் உண்மை இல்லை. ஆனால் மக்கள் அதனை உண்மை என்று நம்பத் தொடங்கிவிட்டனர்.
“Guys, come on! 😄”
That video I posted with Mr. Mohan Babu garu and Vishnu Manchu was pure fun — just a bunch of us having a good laugh like we always do.
We joked about buying 7000 acres in New Zealand, even owning the mountains! Vishnu played along, Mohan Babu garu was in…
நியூஸிலாந்தில் 7000 ஏக்கர் வாங்குவது சுலபம் என்றால் நான் அங்கே ஒவ்வொரு வார இறுதியிலும் படப்பிடிப்பு நடத்துவேன். எங்களில் யாரும் அங்கே நிலம் வாங்கவில்லை. நியூஸிலாந்து நாட்டுக் குடிமக்களை தவிர வேறு நாட்டு மக்கள் அங்கே நிலம் வாங்குவதை அந்நாட்டு அரசு அனுமதிக்காது” என தெளிவுபடுத்தியுள்ளார்.