ARTICLE AD BOX
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மண்டல பொறுப்பாளர் திமுக கழகத் துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆ ராசா அவர்கள் தலைமையில் கழக நிர்வாகிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இதையும் படியுங்க: கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்.. கண் முன்னே துடிதுடித்து தந்தை பலியான பரிதாபம்..!!
இதில் அமைச்சர் சாமு நாசர் மாவட்ட கழக பொறுப்பாளர் எம்எஸ்கே ரமேஷ் ராஜ் ஆகியோர் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
அப்போது உள்ளே பத்திரிக்கையாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்கவில்லை கலந்தாய்வுக் கூட்டம் நிறைவடைந்த பின் செய்தியாளர்கள் அவரிடம் கலந்தாய்வுக் கூட்டம் குறித்து கேட்டதற்கு, கட்சியின் இன்டர்னல் விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று தெரிவித்தார்.
பின்னர் அவருடன் வந்த அமைச்சர் சாமு நாசர் கட்சி நிர்வாகி ஒருவர் வாங்கி புதிய காரில் திமுக கொடியை அவரே மாட்டிவிட்டு கட்சிக்கு சிறப்பாக பணியாற்ற வேணடுமென அவருக்கு தனது வாழ்த்தினை தெரிவித்தார் .

6 months ago
68









English (US) ·