ARTICLE AD BOX
பண மோசடி வழக்கு
கடந்த ஏப்ரல் மாதம் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்த நிலையில் இந்த நிறுவனங்களின் விளம்பரத்தில் நடித்த மகேஷ் பாபுவிற்கு அமலாக்கத்துறையில் இருந்து நோட்டீஸ் பறந்தது. அதாவது இந்நிறுவனத்தின் விளம்பரத்தில் மகேஷ் பாபு நடித்த நிலையில் மகேஷ் பாபுவுக்கு சம்பளமாக கொடுக்கப்பட்ட பணம் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதா? என்ற கோணத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது.

நில மோசடி புகார்
இந்த நிலையில் தற்போது நில மோசடி புகார் ஒன்றில் நுகர்வோர் ஆணையம் மகேஷ் பாபுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது மகேஷ் பாபுவின் புகைப்படத்தை பயன்படுத்தி அங்கீகரிக்கப்படாத மனைகளை விற்பனை செய்ததாக ரங்காரெட்டி மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் மருத்துவர் ஒருவர் புகார் அளித்ததை தொடர்ந்து இவ்விவகாரத்தில் மகேஷ் பாபுவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சாய் சூர்யா டெவலப்பர்ஸ் விளம்பரத்தின் புரொமோஷனில் நடித்ததற்காக மகேஷ் பாபுவுக்கு ரூ.3.4 கோடி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.