நீ சிங்கக்குட்டி.. மவுசு குறையாமல் 17 சீசனை சாத்தியமாக்கியது எப்படி? CSK MS Dhoni rewind!

1 month ago 37
ARTICLE AD BOX

18வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ள மகேந்திர சிங் தோனி, இதுவரை ஐபிஎல் போட்டிகளில் படைத்த சாதனைகளைப் பார்க்கலாம்.

சென்னை: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், தனக்கான மவுசு கடுகளவு கூட குறையாமல் வலம் வந்து கொண்டிருக்கிறார் மகேந்திர சிங் தோனி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொந்த மைதானமான சென்னை மட்டுமல்லாது, ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் எங்கு விளையாடச் சென்றாலும், அங்கெல்லாம் மஞ்சள் படைகள் படையெடுப்பே அதற்கு சான்றாக இருக்கின்றன.

2008 சீசன் இறுதிப் போட்டியில் CSK விளையாடியது. இந்த சீசனில் மட்டும் 414 ரன்களை தோனி எடுத்தார்.

2009 சீசன் அரையிறுதியில் சிஎஸ்கே விளையாடினாலும், மொத்தமாக 332 ரன்கள் எடுத்தார்.

2010 சீசனில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது தோனி தலைமையிலான மஞ்சள் படை. இந்த சீசனில் 287 ரன்கள் எடுத்திருந்தார்.

2011 சீசனில் சாம்பியன் மீண்டும் சிஎஸ்கே பட்டம் வென்றது. இந்த சீசனில் 392 ரன்களை எடுத்தார்.

2012 சீசனில் இரண்டாம் இடம் பிடித்தது சிஎஸ்கே. இந்த சீசனில் 358 ரன்களைக் குவித்தார் தோனி.

2013 சீசனிலும் இரண்டாம் இடம் பிடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ். இந்த சீசனில் 461 ரன்களை தோனி எடுத்திருந்தார்.

MS Dhoni achievements in IPL

2014 சீசன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், 371 ரன்கள் எடுத்தார் தோனி.

2015 சீசனில் சிஎஸ்கே இரண்டாவது இடம் பிடித்தது. இந்த சீசனில் மொத்தம் 372 ரன்கள் எடுத்தார்.

2016 சீசனில் ரைஸிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணியை தோனி கேப்டனாக வழிநடத்திய நிலையில், இந்த சீசனில் 284 ரன்கள் எடுத்தார்.

2017 சீசனில் ரைஸிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணிக்காக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடிய தோனி, 574 ரன்களை 30 போட்டிகளில் எடுத்தார்.

2018 சீசனில் இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் அரங்கில் விளையாடிய மீண்டும் சாம்பியன் பட்டம் வென்று நிரூபித்தது சிஎஸ்கே. இந்த சீசனில் 455 ரன்களைக் குவித்தார் MSD.

2019 சீசனில் அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரராக உருவெடுத்தார் தோனி. மொத்தம் 416 ரன்கள் அந்த சீசனில் எடுத்தார்.

2020 சீசனில் முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லீக் சுற்றோடு வெளியேறிய நிலையில், இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என தோனி பேசியது கவனம் பெற்றது. மேலும், இந்த சீசனில் 200 ரன்களை தோனி எடுத்தார்.

2021 சீசனில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி சாம்பியன்ஸ் பட்டம் வென்றது. கரோனா பரவல் காரணமாக இந்த சீசனில் பிற்பாதி போட்டிகள் அமீரகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

2022 சீசனில் அணியில் கேப்டன்சி மாறியது. பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் சிஎஸ்கே வெளியேறினாலும், இந்த சீசனில் 232 ரன்களை தோனி எடுத்திருந்தார்.

2023 சீசனில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

இதையும் படிங்க: எங்கயோ கனெக்ட் ஆகுதே.. திமுக பக்கம் சாய்கிறதா தேமுதிக? அரசியலில் சுடச் சுட!

2024 சீசனில் தனது ஐகானிக் அடையாளமாக நீளமான முடி வைத்து ரசிகர்களை கவர்ந்த தோனி, கடைசி சில ஓவர்களில் களத்துக்கு வந்து சிக்ஸர்களைப் பறக்கவிட்டு ரசிகர்களை அலறவிட்டார்.

இவ்வாறு ஐபிஎல் களத்தில் மொத்தமாக 264 போட்டிகளில் விளையாடியுள்ள மகேந்திர சிங் தோனி, 5,243 ரன்களைக் குவித்துள்ளார். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டும் 234 போட்டிகளில் விளையாடிய தோனி 4,669 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 149 கேட்ச் மற்றும் 41 ஸ்டம்பிங் செய்துள்ள MSD, ஒரு இன்னிங்ஸில் அவர் எடுத்துள்ள அதிகபட்ச ரன்கள் 84 ஆகும், மொத்தம் 252 சிக்ஸர்களையும் அவர் விளாசி உள்ளார்.

  • என் வாழ்க்கையை பற்றி பேச நீங்க யாரு..கொந்தளித்த நடிகை பாவனா.!
  • Continue Reading

    Read Entire Article