ARTICLE AD BOX
விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பெரிய திரையில் வாய்ப்பு பெற்றவர் நடிகர் யோகி பாபு. டைமிங் காமெடி மூலம் ரசிகர்களை கவர்ந்த யோகி பாபு, தற்போது எல்லா படங்களிலும் ஒரு காட்சியிலாவது வந்து போய்விடுவார்.
ஒரு வருடத்தில் 20 படங்களில் நடித்த பெருமை யோகி பாபுவுக்கு உண்டு. ஆனால் ஒரு சில படப் பிரமோஷன் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பதில்லை என குற்றச்சாட்டும் உண்டு.
இதையும் படியுங்க: தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?
அந்த வகையில் அவரது நடிப்பில் உருவாகியுள்ள கஜானா திரைப்படம் வரும் 9ஆம் தேதி வெளியாக உள்ளது. இனிகோ பிரபாகரன், வேதிகா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை பிரபாதிஷ் சாம்ஸ் இயக்கி தயாரித்துள்ளார்.
இந்த படத்துக்கான பிரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அப்போது மேடடையில் பேசிய தயாரிப்பாளர் ராஜா, யோகி பாபு எங்கே? இங்க இருக்காறா? உங்க பக்கம் எங்காவது உட்கார்ந்திருக்காரா?
ஓ.. வரலையா? அப்போ அவருக்கு 7 லட்ச ரூபாய் போகலனு அர்த்தம். கேவலமான விஷயம்.. ஒரு பிரமோஷன் என்பது குழந்தை போல, ஒரு நடிகனுக்கு ஒரு குழந்தையை வளர்க்கக்கூடிய பொறுப்பு இல்லனு சொன்னால் நீ நடிகனாக இருக்கவே லாய்க்கி இல்ல. என்ன அர்த்தம் இது, ஒரு பிரமோஷனுக்கு நீங்க வரமாட்டீங்களா? வன்மையா கண்டிக்கிறேன், காலம் உங்களுக்கு கூடிய விரைவில் பதில் சொல்லும் என ஆவேசமாக பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

7 months ago
75









English (US) ·