நீ நடிச்சது போதும் கிளம்பு..வடிவேலுவை துரத்திவிட்ட பாரதிராஜா..எந்த படம்னு தெரியுமா.!

1 month ago 29
ARTICLE AD BOX

அதிக சம்பளம் கேட்ட வடிவேலு

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக விளங்கும் வடிவேலு,தனது தனித்துவமான நடிப்பு மற்றும் உடல் மொழியால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இதையும் படியுங்க: ‘டிராகன்’ ஹீரோயினுக்கு அடித்த லக்..அலேக்கா தூக்கிய மன்மத ஹீரோ.!

ஆரம்ப காலத்தில் பல சவால்களை சந்தித்த இவர் ஒருமுறை
பாரதிராஜா இயக்கிய ‘கிழக்கு சீமையிலே’ திரைப்படத்தில் நடிக்க வடிவேலு அதிக சம்பளம் கேட்டதால்,அவரை இயக்குநர் பாரதிராஜா படத்தில் இருந்து நீக்கி விட்டதாக தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Vadivelu in Kizhakku Seemayile

அந்தக் காலத்தில் இப்படத்திற்காக மிகப்பெரிய பட்ஜெட் ஒதுக்கியிருந்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இதில் வடிவேலுவை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார். ஆனால்,படம் பெரிய பட்ஜெட்டில் தயாராகும் என்பதால்,தனது சம்பளத்தையும் அதிகரிக்க வேண்டும் என்று முடிவெடுத்த வடிவேலு 25,000 சம்பளம் கேட்டாராம்.

இதனால் கோபமடைந்த பாரதிராஜா “நீ நடிக்கவே வேண்டாம் கிளம்பு” என்று கூறி அவரை விட்டு அனுப்பி வைத்தார்.

இதனால் மனமுடைந்து,கண்ணீருடன் வெளியில் வந்த வடிவேலுவிடம் தயாரிப்பாளர் தாணு என்ன ஆச்சு? என்று கேட்டுள்ளார்.வடிவேலு நடந்ததை கூறிய பிறகு, அவர் கேட்ட படியே 25,000 சம்பளம் வழங்கி இனிமேல் சம்பள விஷயத்தை என்கிட்ட கேள்” என்று சமாதானப்படுத்தி,அவரை படத்தில் நடிக்க வைக்க ஏற்பாடு செய்தார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு ‘கிழக்கு சீமையிலே’ திரைப்படம் வடிவேலுவின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

வடிவேலு படங்களில் நகைச்சுவை நடிகராக மக்களை சிரிக்க வைத்தாலும்,அவரின் உண்மை முகம் திரையுலகில் பணியாற்றும் சிலர் மத்தியில் மாறுபட்ட விதத்தில் பேசப்பட்டு வருகிறது,அவர் கூட நடித்த சக நடிகர்கள் எல்லோரும் அவரை பற்றி எதிர்மறையான கருத்துக்களை மட்டுமே தெரிவித்து வருகின்றனர்,ஆனால் வடிவேல் எதையும் பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து வெற்றிகரமான படங்களில் நடித்து வருகிறார்.தற்போது அவர் கைவசம் ‘கேங்கர்ஸ்’ மற்றும் ‘மாரீசன்’ போன்ற முக்கியமான திரைப்படங்கள் உள்ளன.

  • Bharathiraja Vadivelu controversy நீ நடிச்சது போதும் கிளம்பு..வடிவேலுவை துரத்திவிட்ட பாரதிராஜா..எந்த படம்னு தெரியுமா.!
  • Continue Reading

    Read Entire Article