ARTICLE AD BOX
31 வயது வித்தியாசம் – சல்மான் கானின் பதில் என்ன?
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் மற்றும் தமிழ்,தெலுங்கு திரையுலகில் பிரபலமான ராஷ்மிகா மந்தனா முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் “சிக்கந்தர்”.
இதையும் படியுங்க: வசமாக சிக்கிய மும்பை இந்தியன்ஸ் வீரர்…டிவிட்டரில் ஆபாச நடிகையுடன் தொடர்பு..!
இந்தப் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி உள்ளார்.சஜித் நதியத்வாலா தயாரிக்கும் இந்த படத்தில் காஜல் அகர்வால்,சுனில் ஷெட்டி,சத்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நேற்று (மார்ச் 23) நடைபெற்றது.இதில் சல்மான் கான்,ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ், காஜல் அகர்வால் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
அப்போது செய்தியாளர் ஒருவர் “உங்களுக்கும் ராஷ்மிகாவுக்கும் 31 வயது வித்தியாசம் உள்ளது.இதைப் பற்றிய உங்கள் கருத்து?” என்று சல்மான் கானிடம் கேட்பார்.
உடனே அவர்,கதாநாயகிக்கு எந்த பிரச்சினையும் இல்லை,அவருடைய தந்தைக்கும் பிரச்சினை இல்லை,அப்படியிருக்க உனக்கு என்ன தம்பி பிரச்சனை?” என கடிந்து கொண்டார்.
மேலும்,நடிப்பில் ராஷ்மிகாவின் அர்ப்பணிப்பை பார்க்கும்போது என்னுடைய குழந்தை பருவம் நினைவுக்கு வருகிறது.அவர் மிகவும் தீவிரமாக செயல்படுகிறார்” என்று ராஷ்மிகாவை பாராட்டினார்.இப்படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மார்ச் 30 ஆம் தேதி உலகளவில் ரிலீஸ் ஆக உள்ளது.

7 months ago
56









English (US) ·